/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பெடரல் வங்கியில் பணிபுரிய வேண்டுமா
/
பெடரல் வங்கியில் பணிபுரிய வேண்டுமா
PUBLISHED ON : ஜூன் 13, 2017
நமது நாட்டிலுள்ள தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் பெடரல் வங்கி முக்கியமான ஒரு வங்கி. இவ்வங்கியில் தற்சமயம் அதிகாரி மற்றும் கிளார்க் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.06.2017 அடிப்படையில் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே தேதி அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல் புலம் அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் இதர படிப்புகளில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பு அல்லது முது நிலைப் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான ஆப்டிடியூட் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: கிளார்க் பதவிக்கு ரூ.500 மற்றும் ஆபிசர் பதவிக்கு ரூ.700/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இரண்டு பதவிகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 16.
விபரங்களுக்கு: www.federalbank.co.in/career#tab-1

