sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

உழவர் மன்றத்தால் உயர்வுபெற்ற விவசாயி

/

உழவர் மன்றத்தால் உயர்வுபெற்ற விவசாயி

உழவர் மன்றத்தால் உயர்வுபெற்ற விவசாயி

உழவர் மன்றத்தால் உயர்வுபெற்ற விவசாயி


PUBLISHED ON : ஜூலை 25, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 25, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், காளியாபுரம் கிராமத்தில் வசிக்கும் திருவேங்கடம் (94861 34531) தேசிய ஊரக வளர்ச்சி வங்கி மூலம் உழவர் மன்றம் அமைக்கப் பட்டு சாதனை படைத் துள்ளார். அதன் விபரங்கள்:

நோக்கம்: கடன் சம்பந்தப் பட்ட 5 கொள்கைகளை விவசாயிகளுக்கு அறிவிப்பது; அவ்வாறு அறிந்த விவசாயிகள் வங்கிகளின் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து, கிராமத்தின் விவசாயிகளின் தேவைகளை வங்கிகளுக்கு தெரியப்படுத்துவது.

உருவாக்குவது எப்படி: குறைந்தது 10 விவசாயிகளோ அல்லது அதிகபட்சமாக கிராம மக்கள் அனைவருமே உறுப்பினராகலாம். கிராமத்திற்கு ஒரு மன்றம் என்றோ இரண்டு அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு மன்றம் என்றோ உருவாக்கலாம். கிராமத்திற்கு அருகில் இருக்கும் வங்கி கிளையின் சிபாரிசுடன் மன்றம் துவங்குவதற்கான விண்ணப்பத்தை நபார்டுக்கு அனுப்ப வேண்டும். நபார்டு ஒப்புதல் பெற்றபின் மன்றங்கள் வங்கிகளால் கிராம மக்கள் முன்னிலையில் முறையாக துவக்கப்பட வேண்டும்.

மன்றங்களுக்கு நபார்டு அளிக்கும் உதவிகள்: மன்றத் துவக்க விழா மற்றும் அடிப்படை பயிற்சி முகாமிற்கான செலவு; வல்லுனர்களின் கருத்துக்களை அறியக் கூட்டப்படும் கூட்டங்களின் செலவு (ஆண்டிற்கு இருமுறை); ஆண்டு பராமரிப்பு செலவு; மற்ற மாவட்டங்கள், கிராமங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சிறந்த திட்டங்கள் அல்லது தொழில்நுட்பங்களைக் காண மேற்கொள்ளும் கல்விச் சுற்றுலாவிற்கான செலவு.

கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் - நோக்கம்: சிறு, குறு குத்தகை விவசாயிகள், விவசா யம் சார்ந்த பண்ணைத் தொழில் களில் ஈடுபடுபவர்கள், சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பண்ணை சாரா தொழில் செய்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான கடன் உதவி எளிதில் கிடைக்க உதவி செய்வது.

யார் உறுப்பினர் ஆகலாம்: ஒரே கிராம பகுதியைச் சார்ந்தவர்களாகவும் ஒரே மாதிரியாக சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட வர்கள் உறுப்பினராகலாம். ஒருவருக் கொருவர் நன்கு அறிமுகமுள்ளவர்களும் பரஸ்பர நம்பிக்கை கொண்டவர்களும் வங்கிக்கடன் பெற உத்திரவாதம் தரத் தயாராகவும் இருக்க வேண்டும்.

குழுக்களை யார் உருவாக்கலாம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்; உழவர் மன்றங்கள் / உழவர்சங்கங்கள்/பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகள்; விவசாய அறிவியல் மையங்கள் / விவசாய தொழில்நுட்ப நிர்வாக அமைப்பு; அரசு துறைகள் / தனிநபர்கள், விற்பனையாளர்கள்; வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்; இதர கூட்டுறவு அமைப்புகள், நுண் கடன் நிறுவனங்கள், அமைப்புகள்.

நபார்டு மூலமாக விநியோகிக்கப்படும் மத்திய அரசின் மானியங்கள்: வேளாண் விற்பனை உள் கட்டமைப்பு; கிராமிய கிட்டங்கி (குடோன்); குளிர்பதன சேமிப்பு; விவசாய கிளினிக்குகள் மற்றும் வேளாண் வணிக மையங்கள்; கரிக விவசாய இடுபொருட்கள்; பால்பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்; ஒருங்கிணைந்த சிறு அசை (ஆடு, முயல்) வளர்ப்பு திட்டம்; பன்றி வளர்ப்புத் திட்டம்; ஆண் எருமைக் கன்றுகள் வளர்ப்புத் திட்டம்; சிறு தொழிற் சாலைகளுக்குதொழில்நுட்ப மேம்பாட்டிற்கான கடன் சார்ந்த மானிய திட்டம்.

-கே.சத்தியபிரபா, உடுமலை.






      Dinamalar
      Follow us