sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுக்க...

/

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுக்க...

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுக்க...

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுக்க...


PUBLISHED ON : ஜூலை 25, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 25, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு பின் பழுக்கவைக்கப்படுகின்றன. இயற்கையாக இவ்வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும்போது மெதுவாக பழுப்பதினால் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ரகங்களில் பழங்கள் முழுவதுமாகப் பழுக்காமல் நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும் மத்தியப் பகுதியில் மென்மையாகவும் இருக்கும்.

எத்ரெலில்: பொதுவாக, பழவகைகளின் பழுக்கும் திறனை மேம்படுத்த அவை செங்காயாக இருக்கும்போது, அவற்றின் மீது எத்ரெல் தெளித்தல் அல்லது செங்காய்களை எத்ரெலில் முக்கி எடுத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் மேற்கூறிய முறைகள் பின்பற்ற கடினமானவை. அது மட்டுமின்றி, வணிக ரீதியாகக் கிடைக்கும் எத்ரெலில் வேதியல் மாசுப் பொருட்கள் காணப்பட்டால், அவை பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க சிலநவீன நிறுவனங்கள் எத்திலின் வாயுவை வணிக ரீதியாக பழங்களை பழுக்க வைக்க உபயோகிக்கின்றனர். ஆனால் இவ்வாறு எத்திலின் வாயு மூலம் பழங்களை பழுக்க வைக்கும் அமைப்புகளை வடிவமைக்க அதிக செலவாகும். இவ்வடிவமைப்புகளை சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளால் நிறுவ இயலாது. எனவே பழவகைகளை எளிதில் பழுக்க வைக்க பிளாஸ்டிக் கூடாரங்களில் எத்திலின் வாயு மூலம் செங்காய்களைப் பழுக்கவைக்கும் எளிதான மாற்றுமுறை வடிவமைக்கப்பட்டது.

3 நாட்கள், 100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் காண்பிக்கப்பட்டு அறை வெப்பநிலையில் 3 நாட்கள் பப்பாளி பழங்கள் சேமிக்கப்பட வேண்டும்.

இம்முறையில் காற்றுப் புகாத பிளாஸ்டிக் கூடாரத்தினுள் எத்ரெலுடன் காரத்தன்மையுடைய பொருளினைச் சேர்க்கும் போது உருவாகும் எத்திலீன் வாயுவின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட காற்றுப்புகாத கூடாரத்தினுள் பிளாஸ்டிக் க்ரேட்டுக ளில் (காற்று செல்லக்கூடிய ஓட்டைகள் கொண்டவை) பழுக்காத செங்காய்கள் பழுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் காய்களின் அளவுக்கேற்ற போதுமான அளவு எத்ரெலை ஒரு பாத்திரத்தில் வைத்து கூடாரத்திற்குள் வைக்க வேண் டும். எத்திலீன் வாயு உருவாதற்கு, எத்ரெலுடன் சோடியம்ஹைட்ராக்சைடு (காரத்தன்மையுடைய பொருள்) குறிப்பிட்ட அளவு சேர்க்க வேண்டும். எத்திலீன் வாயு கூடாரம் முழுவதற்கும் சீராகப் பரவுவதற்கு பேட்டரி மூலம் இயங்கும் ஒரு விசிறியினை கூடாரத்திற்குள் வைக்க வேண்டும். 18-24 மணி நேரத்திற்குப் பின் பழங்களை வெளியே எடுத்து முழுவதுமாக பழுப்பதற்கு அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

இயற்கையான முறையில் 10 நாட்கள் பழுக்க எடுத்துக்கொண்ட மாம்பழங்கள், 100 பி.பி.எம். அளவு எத்திலீன் வாயுவில் 24 மணி நேரம் வைக்கப்பட்ட திரண்ட மாங்காய்கள் (செங்காய்கள்) அவற்றின் குணநலன்கள் மாறாமல் பழுப்பதற்கு 5 நாட்கள் போதுமானது. இது போன்றே, அறை வெப்பநிலையல் 100 பிபிஎம் அளவு எத்திலீன் வாயுவில் 15 மணி நேரத்திற்கு வைக்கப்படும் வாழைத் தார்கள் பழுப்பதற்கு 4 நாட்களும் அதே அளவு எல்லிதீன் வாயுவில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப் படும்.வாழைத்தார்கள்பழுக்க 6 நாட்கள் ஆகும். போதுமான வெப்பநிலையில் எத்திலீன் வாயுவில் வைக்கப்பட்ட பப்பாளி சீராக பழுப்பதற்கு 4 நாட்களாகும். மேலும் தகவல்களுக்கு:

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், இந்திய அரசு, ஹசர்கட்டா,

பெங்களூரு-560 089.

மின் அஞ்சல்:
director@iihr.ernet.in, www.ihrc.nic.in.

எம்.ஞானசேகர், தொழில் ஆலோசகர், 97503 33829.






      Dinamalar
      Follow us