sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பணம் கொழிக்கும் பனை மரம்

/

பணம் கொழிக்கும் பனை மரம்

பணம் கொழிக்கும் பனை மரம்

பணம் கொழிக்கும் பனை மரம்


PUBLISHED ON : ஆக 15, 2018

Google News

PUBLISHED ON : ஆக 15, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். 1978ல் தமிழக அரசால் மாநில மரமாக அறிவிக்கப்பட்டு தொன்று தொட்டு பயிரிடப்பட்டு வரும் ஒரு மரப்பயிர்.

60 முதல் 100 ஆண்டு வரை நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இந்த மரம் உள்ளது.

இந்தியாவில் உள்ள 8.5 கோடி பனைமரங்களில் 5.1 கோடி மரம் தமிழ்நாட்டில் உள்ளது. 50 சதவீதம் துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகிறது. பனைமரத்திலிருந்து பதநீர், பனம்பழம், ஓலை, நார், மட்டை, நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு என பலவித பொருட்கள் பெறப்படுகிறது.

தரிசு நிலங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்வதை தவிர்க்க பனைமரங்களை விவசாயிகள் விளைவிக்கலாம். நன்கு பழுத்த மற்றும் முதிர்ந்த பழங்களிலிருந்து பனங்கொட்டைகளை பிரித்தெடுத்து அதனை ஊட்டச்சத்து கரைசல் வளர்ச்சி ஊக்கிகளுடனோ அல்லது 0.1 சதவீதம் கார்பன்டாசிம் கரைசலில் ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்த ஆறு வாரத்திற்கு பின்பு முளைக்கும். அனைத்து மண் வகைகளிலும் வளரும். வயது அதிகரிக்க, அதிகரிக்க இரண்டாம் ஆண்டில் 10 கிலோ தொழு உரம், 10-ம் ஆண்டு 50 கிலோ தொழு உரம் இடுவதன் மூலம் அதிக பதநீர் பெறலாம்.

பனை நாற்றுகளை 3.5க்கு 3.5 மீட்டர் இடைவெளியில் 30க்கு 30 மற்றும் 60 செ.மீ., குழி அளவில் நடவு செய்வதன் மூலம் ஒரு ஏக்கரில் 300 மரங்களை நடலாம்.

பனைமரங்கள் வளர்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 40 லிட்டரிலிருந்து 177 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

பருவமழை காலங்களில் எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் மற்றும் பழப்பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யலாம். பனை மரங்களை சுத்தம் செய்து தகுந்த பயிர் பாதுகாப்பினை மேற்கொள்வதன் மூலம் நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்து அதிக மகசூலை பெறலாம். பனைமரங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. அவற்றை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணரிப்பை தடுத்து நாட்டின் நீர் வளத்தை பாதுகாக்க நாம் முயல வேண்டும்.

-முனைவர் சி.அம்பிகா

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி

விசாலயன்கோட்டை.







      Dinamalar
      Follow us