PUBLISHED ON : ஜன 03, 2018

பரப்பளவு குறைந்த நிலத்தில் இருந்து ஆம்பித்து மிக அதிகப்படியான பரப்பினிலும் பாசன வசதியை கொடுக்கக்கூடிய நீர் தெளிப்பான் இதுவாகும். மிக எளிதான அமைப்பை கொண்டது.
ஒரு நிமிடத்திற்கு சுமார் 50 லிட்டர் நீரை தெளிக்கும். 20 நிமிடத்தில் பத்து பன்முனை நீர் தெளிப்பான்களை கொண்டு ஒரு ஏக்கர் நிலத்திற்கு பாசனம் கொடுக்கலாம். 1 - 2 நீர் தெளிப்பான்களுக்கு 1 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்பு தேவை. 3 - 20 நீர் தெளிப்பான்களை இயக்க 3 எச்.பி. திறன் முதல் 10 எச்.பி. திறன் ஆற்றல் கொண்ட மோட்டார் பம்பு தேவைப்படும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதனை மிக எளிதாக மாற்றி அமைக்கலாம். இதனை உபயோகித்தால் சாதாரண பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரில் பத்தில் ஒரு அளவே தேவை. நேரமும் குறைவு. பன்முனை நீர் தெளிப்பானின் விலை 1,800 ரூபாய். சக்கரங்கள் கூடிய பன்முனை நீர் தெளிப்பானின் விலை 2,700 ரூபாய். 94865 85997.
- டி.யுவராஜ்
வேளாண் பொறியாளர், உடுமலை.

