/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அனைத்து மண்ணிலும் சாகுபடியாகும் இளஞ்சிவப்பு நிற ரோஜா
/
அனைத்து மண்ணிலும் சாகுபடியாகும் இளஞ்சிவப்பு நிற ரோஜா
அனைத்து மண்ணிலும் சாகுபடியாகும் இளஞ்சிவப்பு நிற ரோஜா
அனைத்து மண்ணிலும் சாகுபடியாகும் இளஞ்சிவப்பு நிற ரோஜா
PUBLISHED ON : ஆக 28, 2024

இளஞ்சிவப்பு நிற பன்னீர் ரோஜா சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் அடுத்த, தக்கோலத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.பசுபதி கூறியதாவது:
இளஞ்சிவப்பு நிற பன்னீர் ரோஜா பூ சாகுபடி செய்துள்ளேன். இந்த ரோஜா செடிகள் அனைத்து விதமான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். இதில், செங்கட்டு மண்ணில் விளையும் ரோஜா அதிக மகசூலை கொடுக்கும். பிற மண்ணில் இருக்கும் சத்துக்களுக்கு ஏற்ப, மகசூல் கொடுக்கும்.
குறிப்பாக, ரோஜா சாகுபடியில், பூச்செடிகள் நட்டு மூன்று மாதங்களுக்கு மொட்டுகளை கிள்ளி எரிய வேண்டும். அதன் பின் வரும் மொட்டுகளை, பூக்கள் பூக்க அனுமதிக்க வேண்டும். தினசரி பூக்கும் பூக்களை கண்காணித்து, அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக சந்தைப்படுத்தும் திறனை வளர்க்கும் விவசாயிகள், ரோஜா பூக்களில் கணிசமான வருவாய் ஈட்டலாம்.
பூ சாகுபடியை பொறுத்தவரையில், பூக்கள் சீசன் இல்லாத நேரங்களில், பூக்களுக்கு விலை கூடுதலாகவும். பூக்களின் சீசன் நேரத்தில் குறைந்த விலையும் கிடைக்கும். இரண்டையும் சராசரியாக கணக்கிடும் போது, கணிசமான வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:ஆர்.பசுபதி,
63813 39436.