/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்தில் விளையும் வெள்ளை நிற சப்போட்டா
/
மாடி தோட்டத்தில் விளையும் வெள்ளை நிற சப்போட்டா
PUBLISHED ON : ஆக 28, 2024

வெள்ளை நிற சப்போட்டா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில், மழைக்கு ஏற்றவாறு குளிர், வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம்.அந்த வகையில், வெள்ளை நிற சப்போட்டா மரத்தை மாடி தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளேன். இது, மூன்று ஆண்டுகளில் மகசூலுக்கு வருகிறது. துவக்கத்தில், குறைந்த மகசூல் கிடைக்கும். செடிகளை கவாத்து செய்த பின், அதிக மகசூல் கொடுக்க துவங்கும்.
இந்த சப்போட்டா பழத்தின் தோல் பச்சை நிறத்திலும், பழம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். பிற ரக சப்போட்டா பழத்தை போல, உரித்து சாப்பிடலாம். இந்த பழத்தின் விதைகள் பெரிதளவில் இருக்கும்.
இந்த பழங்களை மதிப்புக்கூட்டிய பொருளாக தயாரித்து விற்பனை செய்தால், கணிசமான மகசூல் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 72005 14168.