/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை விவசாயியின் வெற்றிக்கதை
/
திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை விவசாயியின் வெற்றிக்கதை
திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை விவசாயியின் வெற்றிக்கதை
திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை விவசாயியின் வெற்றிக்கதை
PUBLISHED ON : ஜூலை 20, 2011

திருப்பூர் மாவட்டம், முருகம் பாளையத்தில் வசிக்கும் விவசாயி முருகவேல். தமிழகத்தில் பேரீச்சையை திசுவளர்ப்பு முறையில் வெற்றிகரமாக இரண்டாவது விவசாயியாக உரு வெடுத்துள்ளார். அவர் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தினமலர் நாளிதழில் வெளியிட்டுள்ள விவசாயமலர் கட்டுரையில் திண்டுக்கல் மாவட்ட விவசாயி அன்பழகன் தோட்டத்திற்கு சென்று அவரது அனுபவம் மூலம் பேரீச்சை சாகுபடி செய்துள்ளார்.
2.5 ஏக்கரில் 200 திசுவளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009 பிப்ரவரியில் முருகவேல் நடவு செய்தார். இஸ்ரேல் தொழில்நுட்ப முறையில் வளர்த்தார். ஒரு பேரீச்சை மரம் பழங்களை கொடுக்க குறைந்தது மூன்றாண்டாகும். ஆனால் இவரது பண்ணையில் 28 மாதங்களிலேயே பழங்களை கொடுத்துள்ளது.
ஒரு ஏக்கரில் சுமார் 60 கன்றுகளை நடலாம். குறைந்தது எட்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 30 டிகிரி செல்சியஸ் வெப்பமே போதுமானது. வடிகால் வசதி உள்ள இடங்களில் மட்டுமே பேரீச்சை வளரும். பேரீச்சையில் டேனின் என்னும் வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் அதை அப்படியே சாப்பிட முடிவதில்லை. எனவே, பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. ஆனால் திசு வளர்ப்பு முறையில் உரு வாக்கப்படும் பர்ரி ரக பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும்தான் இவை காய்க்கும்.
ஒரு கன்று நட ரூ.3,500 வரை செலவு செய்தேன். மரமாக வளர்வ தற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளேன். முதலாண்டில் ஒரு மரத்தில் 40 முதல் 50 கிலோ வரை பழங்கள் காய்க்கும். மரம் 75 ஆண்டுகளுக்கு மேல் வாழும். மரம் வளர வளர காய்க்கும் பழங்களின் எடை அதிகரிக்கும். இந்த பழங்கள் கிலோ 350 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
பேரீச்சை உண்பதன் நன்மைகள்: பர்ரி பேரீச்சையில் எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் இயற்கையாகவே அதிகமாக உள்ளது. ஆழ்ந்த உறக்கத்திற்கு துணைபுரிகிறது. சோர்வை களைகிறது.
ஒரு வேளைக்கு 2 பழம் வீதம் 30 நாட்கள் வரை தொடர்ந்து உண்பதால் மாதவிடாய் குறைபாடுகள் நீங்கும். நல்ல கண்பார்வை கிடைக்கும்.
தொடர்புக்கு: முருகவேல், முருகம்பாளையம், மங்கலம்-641 663. போன்: 0421-234 6055,
மொபைல்: 98651 50040, 98651 50060.
-கே.சத்யபிரபா, உடுமலை.

