sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து வெற்றியடைந்த விவசாயி

/

கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து வெற்றியடைந்த விவசாயி

கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து வெற்றியடைந்த விவசாயி

கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து வெற்றியடைந்த விவசாயி


PUBLISHED ON : டிச 05, 2012

Google News

PUBLISHED ON : டிச 05, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் வட்டம், சிக்கனாபுரம் கிராமத்தில் வசிக்கும் தண்டபாணி என்ற விவசாயி கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து இயற்கை வேளாண்மை யில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரின் தயாரிப்பின் தொழில் நுட்பங்கள் கீழ்வருமாறு:

ஜீவாமிர்தம் கரைசல்:



நாட்டு பசுவின் சாணம்-10கிலோ, நாட்டு பசுவின் கோமியம்- 5-10 லிட்டர், வெல்லம்-2 கிலோ, தண்ணீர்-200 லிட்டர், பயிருக்கு ஊட்டச்சத்தினை அளிக்க தட்டைப்பயிர் மாவு-2 கிலோ, வரப்பு மண்- ஒரு கையளவு. 10கிலோ சாணத்தில் நுண்ணுயிரிகள் 30 லட்சம் கோடியில் இருந்து 20 நிமிடத்தில் 60 லட்சம் கோடியாகவும் 40 நிமிடத்தில் 120 லட்சம் கோடியாகவும் மாறும்.

நாட்டு பசுவின் சாணம், கோமியம், தண்ணீர், வெல்லம், தட்டைப்பயறு மாவு, வரப்பு மண் ஒரு கையளவு ஆகியவற்றை ஏதாவது ஒரு பாத்திரம் (தாமிரம் தவிர) எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். 3 தடவை ஒரு நாளில் காலை, மதியம், மாலை கடிகார முள் சுற்றும் திசையில் கலக்கிவிட வேண்டும். 48 மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம். 7 நாட் கள் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் நுண்ணுயிர்கள் இறக்க ஆரம்பித்துவிடும். நொதிக்கும் போது கரைசலில் இருந்து கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்றவை வெளி யேறும். எனவே, கலனின் மூடியை இறுக்கமாக மூடக்கூடாது. இதை மாலை வேளையில் மட்டுமே பயிருக்கு தெளிக்க வேண்டும்.

60 முதல் 90 நாட்கள் வரையுள்ள பயிர்கள்:



உளுந்து, நிலக்கடலை, பாசிப்பயறு, சோயாபீன்ஸ், கம்பு, கேப்பை, தட்டைப் பயறு. முதல் தெளிப்பு: விதைத்து 21 நாள் கழித்து 100 லி. தண்ணீர், 5 லி. ஜீவாமிர்தம் (1 ஏக்கருக்கு). 2ம் தெளிப்பு-முதல் தெளிப்பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 150லி. தண்ணீர், 10 லி. ஜீவாமிர்தம் (ஒரு ஏக்கருக்கு). 3ம் தெளிப்பு - இரண்டாம் தெளிப் பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 200லி. தண்ணீர், 20 லி. ஜீவாமிர்தம் (ஒரு ஏக்கருக்கு). கடைசி தெளிப்பு - கதிரில் பால் நன்றாக பிடிக்கும் போது (அ) காய் பிடிக்கும்போது 20 லி. தண்ணீர், 5 லி. புளித்த மோர் (ஒரு ஏக்கருக்கு).

90 முதல் 120 நாட்கள் வரையுள்ள பயிர்கள்:



பூச்செடிகள், காய்கறிகள், நெல், கோதுமை, கம்பு, கேப்பை, பயறு வகைகள். முதல் தெளிப்பு: ஒரு மாதம் கழித்து 100 லி. தண்ணீர், 5லி. ஜீவாமிர்தம். 2ம் தெளிப்பு - முதல் தெளிப்பிற்கு பிறகு 21 நாட்கள் கழித்து 150லி. தண்ணீர் 10 லி. ஜீவாமிர்தம். 3ம் தெளிப்பு - விதைத்து 72 நாள் கழித்து தெளிக்கவேண்டும். தொடர்புக்கு: தண்டபாணி, சிக்கனாபுரம்,

போன்: 95240 67068.

-கே.சத்தியபிரபா, உடுமலை






      Dinamalar
      Follow us