sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி

/

முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி

முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி

முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி


PUBLISHED ON : அக் 03, 2012

Google News

PUBLISHED ON : அக் 03, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று பச்சரிசிக்குப் பெயர் பெற்ற பல நெல் ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் ஆவணி, புரட்டாசியில் வெள்ளைப் பொன்னியைத்தான் சாகுபடி செய்கிறார்கள். இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் வைக்கோலும் போடப்படுகிறது. வெள்ளைப் பொன்னி ரகம் இக்காரணத்தால் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் வெள்ளைப்பொன்னி அரிசி சிறந்த பச்சரிசியாகவும் உள்ளது. அரவையில் குருணை விழுந்தாலும் வெள்ளைப் பொன்னி தொடர்ந்து சாகுபடியில் உள்ளது. சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட சோறாகின்றது. இதனால் விவசாயிகள் இந்த ரகத்தை முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி என்று அழைக்கின்றனர். இந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர். நாற்றின் வேர்கள் களர் தன்மையைத் தாங்கி நாற்று பச்சைகட்டி விடுகின்றது.

வெள்ளைப் பொன்னியை சாகுபடி செய்ய 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து 20 கூடை மக்கிய தொழு உரம் இடவேண்டும். மேலும் 16 கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். நாற்று செழிப்பாக வரும். நடவு வயலுக்கு அதிக அளவு நன்கு மக்கிய இயற்கை உரம் இடவேண்டும். இதற்கு நான்கு ட்ரெய்லர் லோடு இயற்கை உரம் இடவேண்டும்.

விவசாயிகள் மரங்களின் தழைகளையும் சேற்றில் போட்டு மிதித்துவிடலாம். வெள்ளைப் பொன்னிக்கு இயற்கை உரங்கள் அதிகம் இட்டு ரசாயன உரத்தைக் குறைத்தால் பயிர் கீழே சாயாது. மேலும் பயிர் பாதுகாப்பு செலவும் குறையும். வயலில் டிஏபி அரை மூடை மற்றும் பொட்டாஷ் அரை மூடை, யூரியா 5 கிலோ இவைகளை இடலாம். நடவு வயலில் சரியாக அண்டை வெட்டி சீராக சமன் செய்ய வேண்டும். சமன் செய்த நிலத்தில் ஏக்கரில் 12 கிலோ ஜிங்க் சல்பேட்டினை தேவையான ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும். உடனே நாற்றினை வயலில் வரிசை நடவு போடவேண்டும். வரிசைக்கு வரிசை 9 அங்குலமும் வரிசையில் குத்துக்கு குத்து 9 அங்குலமும் இடைவெளி விட்டு 30 நாட்கள் வயதுடைய நாற்றினை குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். இவ்வாறு செய்தால் சாயும் தன்மை கொண்ட பயிரை வயலில் சாயாமல் நிற்க செய்யலாம். இதனால் கதிர்கள் வாளிப்பாக வரும். மகசூலும் அதிகம் கிடைக்கும். நட்ட பயிருக்கு இரண்டு முறை களையெடுக்க வேண்டும். நடவு நட்ட 25 நாட்களுக்கு பிறகு மேலுரமாக யூரியா 15 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ இடவேண்டும். சாகுபடி சமயம் பயிரை கண்காணித்து பூச்சி, வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும். இம்மாதிரியாக சாகுபடிசெய்தால் ஏக்கரில் 25 மூடைகள் (மூடை 75 கிலோ) மகசூலாகக் கிடைக்கும். மூடைக்கு விலை ரூ.675 வரை கிடைக்கும். நியாயமான விலை ரூ.750 இருந்தாலும் வியாபாரிகள் இந்த விலையைக் கொடுக்க மாட்டார்கள். விவசாயிகள் வைக்கோல் விற்பனையிலும் ரூ.1,125 வரை பெறமுடியும். வெள்ளைப் பொன்னி சாகுபடியில் செலவு போக நிகர லாபமாக ரூ.8000 வரை பெறமுடியும்.

வெள்ளைப்பொன்னியை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி விவசாயிகள் புரட்டாசியிலும் நாற்று விட்டு நடலாம். இப் பட்டத்தில் சாகுபடி செய்பவர்களது இளம்பயிர் ஐப்பசி - கார்த்திகை பட்டத்தில் பெய்யும் மழையில் மாட்டிக் கொள்ளும். இருப்பினும் தீங்கு எதுவும் ஏற்படுவது இல்லை. இளம் பயிர்களது மகசூல் திறன் அதிகரிக் கின்றது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கின்றது. மேலும் நல்ல அனுபவம் பெற்ற இப்பகுதி விவசாயிகள் பயிர் தொண்டைக்கதிர் பருவம் வரும்போது ஒரு கிராம் பவிஸ்டின் மருந்தினை ஒருலிட்டர் நீரில் கலந்து தெளித்து பூஞ்சாள நோய் வராமல் தடுத்துவிடுகின்றனர். இந்த சிகிச்சைக்குப்பின் நெல்மணிகள் சவரன் நிறத்தை அடைகின்றது. இந்த விவசாயிகள் இயற்கை உரங்களோடு உயிர் உரங்களையும் (அசோஸ் பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா) உபயோகப் படுத்துகின்றனர்.

விவசாயிகள் கவனிக்க:

வெள்ளைப்பொன்னி சிறந்த பச்சரிசி ரகம். அரிசி பச்சரிசியாக இருந்தாலும் புழுங்கல் அரிசியாக இருந்தாலும் கலர் மங்கலாக இருக்காமல் வெண்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாகுபடியில் வெற்றியடைவது விவசாயிகளது திறமையைப் பொருத்து இருப்பதால் விவசாயிகள் திறமையாக செயல்பட வேண்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us