sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : அக் 03, 2012

Google News

PUBLISHED ON : அக் 03, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டு நெல் கோ.4 விதை உற்பத்தியில்

விவசாயியின் சாதனை:

2011-12ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம், மாதாம்பாளையம் விவசாயி வெங்கிடு வீரிய ஒட்டுநெல் விதை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளார். வீரிய ஒட்டு நெல்லின் 'தாயாதி விதைகள்' 'கோ.எம்.எஸ்.23ஏ ஆறு கிலோவும் (பெண்), சி.பி.174 (ஆண்) 4 கிலோவும் வழங்கப்பட்டது. முதல் நாள் 2 கிலோ சி.பி.174 ஆண் ரகத்தை நன்கு சமன் செய்யப்பட்ட நாற்றங் காலில் பரவலாக விதைத்தார். 5 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் பகுதியாக 2 கிலோ சி.பி.174 ஆண் ரகத்தையும் 6 கிலோ பெண் ரகத்தையும் விதைத்தார். ஏனைய நெல் நாற்றங்காலைப் போலவே பராமரித்து நாற்றின் வயது 22-25 நாட்கள் ஆனதும் நடவு வயலில் 6 வரிசை பெண் நாற்றுக்கு, 2 வரிசை ஆண் நாற்றுக்கு என்ற விகிதத்தில் காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக நடவு செய்தார். முதல் விதைப்பு நாற்றுக்களை முதல் வரிசையிலும் இரண்டாம் விதைப்பு ஆண் நாற்றுக்களை இரண்டாம் வரிசையிலும் நடவுசெய்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ., நாற்றுக்கு நாற்று 30 செ.மீ. இடைவெளி விடப்பட்டது.

ஆண் வரிசைக்கும் பெண் வரிசைக்கும் இடையே 20 து 20 செ.மீ. என்ற இடைவெளியில் நடப்பட்டன. அதாவது நாற்றுக்கு நாற்று 20 செ.மீ. இடைவெளியும், வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும் கொண்டு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யப்பட்டது.

பயிர் பாதுகாப்பு, களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் ஆகியவற்றை இதர நெல் ரகங்களுக்கு பரிந்துரைப்பதையே பின்பற்றினார். பின்னர் முதல் மேலுரமாக எக்டருக்கு 82.5 கிலோ யூரியாவுடன் 25 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் தூர்கட்டும் பருவத்தில் இட்டார். இதே அளவு உரங்களை இரண்டாவது மேலுரமாக கதிர் உருவாகும் சமயத்தில், 3வது மேலுரமாக பூக்கும் தருணத்தில் இட்டார்.

கலப்பு செடிகளை ஒவ்வொரு வரிசையிலும் செடிகள் நட்ட முதலில்இருந்தே அகற்றிவிட்டுள்ளார். பூக்கும் பருவத்தில் மகரந்தம் கொட்டும் செடிகள் மாற்றுப் பாதைகளைக் கொண்ட செடிகளை கண்காணித்து தூரோடு அகற்றினார்.

முக்கிய தொழில்நுட்பங்களான ஆண் பெண் ரகங்கள் ஒரே சமயத்தில் பூக்க வேண்டும். அல்லது பெண் ரகம் இரு நாட்களுக்கு முன்பாக பூக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் தழைச்சத்து கொண்ட யூரியா போன்ற ரசாயன உரங்களை மேலுரமாக இடுவதாலும் அல்லது யூரியா கரைசல் தெளிப்பதாலும் 3 முதல் 4 மாதங்கள் வரை பூக்கும் பருவத்தைத் தாமதப்படுத்தலாம். 20 கிராம் குருணையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 2 சதவீதக் கரைசலை தயாரிக்கலாம். இதே போல் 2 சதவீத டி.ஏ.பி. கரைசலைத் தெளிப்பதால் 2 முதல் 3 நாட்கள் முன்பாக பூக்கச் செய்யலாம். மேலும் வயலில் உள்ள தண்ணீரை வடிப்பதன் மூலம் ஆண் ரகத்தில் பூக்கள் மலர்வதைத் தாமதப் படுத்தவும் முடியும்.

பெண் ரகத்தில் கதிர் முழுமையாக கண்ணாடி இலை உறையைவிட்டு வெளியே வராது. கதிர்கள் நன்கு வெளிவரச்செய்ய 10 முதல் 15 சதம் செடிகள் பூக்கும் தருணத்தில் 15 கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு முறையும், 24 மணி நேரம் கழித்து 15 கிராம் ஜிப்ரலிக் அமிலத்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டாவது முறையும் தெளித்தார். ஜிப்ரலிக் அமிலம் எளிதாக தண்ணீரில் கரையாது. எனவே 1 கிராம் தூளை 10 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் தண்ணீரில் கலந்து தெளித்தார்.

அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்த காலையில் 10 மணி முதல் 11 மணி வரை நீண்ட கயிரை பயிர்களின் கதிர் மட்டத்தில் 4 முறை அல்லது 5 முறை ஆண் வரிசைக்கு நேர் கோட்டில் வளைவு கொடுத்து இழுக்கப்பட்டது. இதுபோல் 10 நாட்களுக்கு மகரந்தச் சேர்க்கை ஊக்குவிக்கப்பட்டது. காற்று இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை. பொதுவாக ஆண் பயிரில் 10 முதல் 20 சதம் நெல்மணிகள் மட்டுமே பிடிக்கும். ஆனால் சரியான விதை உற்பத்தி தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விதை பிடிப்பு சுமார் 60 சதவீதம் இருக்கும்.

நெல்மணிகள் முற்றியபின் ஆண் ரகம் முதலில் அறுவடை செய்யப் பட்டது. பெண் வரிசைகள் விடுபட்ட கலவன்களை அகற்றிவிட்டு பிறகு அறுவடை செய்தபின் தூய்மையான விதைகள் களத்தை நன்கு சுத்தப்படுத்தி தனியாக அடித்து காயவைக்கப்பட்டது. இவ்வாறு பெண் வரிசைகளிலிருந்து கிடைக்கும் விதைகள் வீரிய ஒட்டுநெல் விதைகளாகும்.

வீரிய ஒட்டு நெல் விதைகள் கிலோ ரூ.110க்கு துறையிலிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளப்பட்டது. ஏக்கருக்கு வீரிய ஒட்டு நெல் விதை 800 கிலோ கிடைத்துள்ளது. ஆண் நெல் ரகத்திலிருந்து 1350 கிலோ விதையும், 3500 கிலோ வைக்கோலும் கிடைத்துள்ளது. மொத்த சாகுபடி செலவு ரூ.24,796. மொத்த வரவு ரூ.1,05,000/- நிகர லாபம் ஏக்கருக்கு 80,204. தொடர்புக்கு:

முன்னோடி விவசாயியின் முகவரி:

எஸ்.பி. வெங்கிடுசாமி, 29, ஊர்க்கவுண்டர் தோட்டம், வரதம்பாளையம், சத்தியமங்கலம். (தகவல்: முனைவர் க.மனோன்மணி, முனைவர் ச.ராஜன், க.தியாகராஜன், நெல் இனவிருத்தி நிலையம், த.வே.ப.கழகம், கோவை-641 003. போன்: 0422-247 4967)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us