/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தானிய தழைச்சத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்
/
தானிய தழைச்சத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்
PUBLISHED ON : டிச 04, 2019

பல தானிய தழைச்சத்தால், கூடுதல் மகசூல் பெறலாம் என, திருவள்ளூர் மாவட்டம், தலக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த, இயற்கை சாகுபடி விவசாயி ஜி.சந்தானம் கூறியதாவது: இயற்கை உரங்களை பயன்படுத்தி, மாப்பிள்ளை சம்பா, கறுப்புக்கவுனி, துாய மல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெல்லை சாகுபடி செய்கிறேன். இதில், துாய மல்லி ரக நெல் சாகுபடி செய்வதற்கு முன், கம்பு, சோளம், வேர்க்கடலை, உளுந்து, கம்பு, ராகி, வெந்தயம், கடுகு, சணப்பை, தக்கைப்பூண்டு உள்ளிட்ட பல தானியங்களை கலந்து, நிலத்தில் விதைத்தேன்.
இதையடுத்து, 40 நாட்களுக்கு பின், பூ எடுக்கும் பருவத்தில், நிலத்தை உழவு செய்து, துாய மல்லி, பாரம்பரிய ரக நெல் நட்டேன்.மேலும், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை கையாளுவதால், நெற்பயிர் நன்றாக வந்துள்ளது. அறுவடையில், 32 முதல், 35 மூட்டை வரை, மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன். முன், 20 முதல், 25 மூட்டை நெல் மட்டுமே, மகசூல் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 77087 22486

