PUBLISHED ON : டிச 04, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தன மர சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:சந்தன மரங்களில், பல வித ரகங்கள் உள்ளன. நம்மூர் மண்ணுக்கு, வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் மரங்களை சாகுபடி செய்யலாம்.இவ்விரு மரங்களையும், தனித்தனியாக வளர்த்தால், செடிகள் இறக்க நேரிடும். அதற்கு பதிலாக, சந்தன மரங்களுக்கு பக்கத்தில், வேர் பிடிக்கும் பிற செடிகள் மற்றும் பிற மரக்கன்றுகளை வளர்க்கலாம்.சந்தன மரங்கள் நடும் போது, முறையாக அரசு அனுமதி மற்றும் பாதுகாப்புடன் இருந்தால் போதும்.ஒரு ஏக்கருக்கு, 500 சந்தன மரக்கன்றுகளை நட்டால், 15 ஆண்டு களுக்கு பின், 4 கோடி ரூபாய்வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 93829 61000

