PUBLISHED ON : நவ 30, 2016

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள்
ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விதைப்புக்கருவி / வரிசை விதைப்பு நிலக்கடலையில் பயறு வகை ஊடுபயிர் சாகுபடிக்கு எக்டேருக்கு 1000 ரூபாய் அல்லது 50 சதவிகிதம். உயிர் உர வினியோகத்திற்கு எக்டேருக்கு 150 ரூபாய் அல்லது 50 சதவிகிதம்.
வரப்பில் ஆமணக்கு சாகுபடி செய்ய எக்டேருக்கு 300 ரூபாய் அல்லது 50 சதவிகிதம். நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் வினியோகம் செய்ய 750 ரூபாய் அல்லது 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.
பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தி கொள்முதல் விலையில் குவிண்டாலுக்கு 2000 ரூபாய் அல்லது கொள்முதல் விலையில் 25 சதவிகிதம்.
சான்று விதை வினியோகம் குவிண்டாலுக்கு 250 ரூபாய் அல்லது விற்பனை விலையில் 25 சதவிகிதம். திரவ உயிர் உரம் வினியோகம் செய்ய எக்டேருக்கு 150 ரூபாய் அல்லது விற்பனை விலையில் 25 சதவிகிதம்.
நுண்ணூட்டச்சத்து கலவை வினியோகம் செய்ய எக்டேருக்கு 500 ரூபாய் அல்லது 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. பயிர்கள், இடு பொருட்கள், வேளாண் இயந்திரங்கள் என வேளாண்மையில் அனைத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் மானியங்களை வாரி வழங்கி வருகின்றனர். தொடர்புக்கு அந்தந்த வட்டார உதவி இயக்குனர், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
