sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்

/

ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்

ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்

ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்


PUBLISHED ON : மே 02, 2012

Google News

PUBLISHED ON : மே 02, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு குணங்களைக் கொண்ட ஆடுதுறை நெல் ரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் அதிக சவுகர்யங்கள் இல்லாத, சிறு விவசாயிகளுக்கு ஏற்றது ஆடுதுறை 37 நெல் ரகமாகும். பொதுவாக கோடையில் நெல் சாகுபடியை செய்வது மிகக் கடினமானது. இந்தக் கோடையிலும் நல்ல பலனைத் தருவது ஆடுதுறை 37 ரகமாகும். சிறு விவசாயிகள் இதனை சாகுபடி செய்யலாம். வைகாசி பட்டத்தில் நெல் சாகுபடி செய்வது சிறிது கடினமானாலும் வைகாசியும் நெல் சாகுபடி பட்டம்தான். இந்த மாதத்தில் கோடை மழை நல்லபடியாக பெய்து கிணறுகளிலும் தண்ணீர் இருப்பின் நெல் சாகுபடியை செய்ய முடியும். மேலும் வைகாசி பட்டத்தில் சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் இடர்ப்பாடுகளை கொண்ட இப்பட்டத்தில் குறுகிய கால ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்ய இயலாது. ஆனால் இதே பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூலைக் கொடுக்கும் குறுகிய கால ஆடுதுறை 37 ரகம் உள்ளது. இந்த ரகம் கோடையில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் கொண்டதால் இதனை சாகுபடி செய்யலாம். ஆடுதுறை 37 ரகத்தில் நெல் அரவையில் அரிசி அவுட் டேர்ன் 60 சதம் வரை கிடைக் கின்றது. அரிசி குண்டாக இருக்கும். இதர ரகங்களில் 56 சதவீதம் கிடைப்பதே சிரமம் ஆகும். ஆடுதுறை 37 ரகத்திற்கு கிராமங்களில் மதிப்பு இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. ஆடுதுறை 37 ரகத்தின் அரிசியை குறுநில விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். கரும்பு அறு வடையின்போது வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் நிலச் சொந்தக் காரர்களை கூலியாக பணம் கொடுக்காமல் ஆடுதுறை 37 அரிசியை கூலியாக கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். ஏழை மக்கள் ஆடுதுறை 37 அரிசியை விரும்புவதற்கு முக்கிய காரணம் இதன் பழைய சோறு கெட்டுவிடாமல் இருப்பதே ஆகும். ஆடுதுறை 37 ரகத்தில் நெல் மகசூல் கணிசமாக இருப்பதோடு வைக்கோல் மகசூலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடுதுறை 36 போன்ற ரகத்தில் ஏக்கரில் 200 பிரி வைக்கோல் கிடைக்கும்போது ஆடுதுறை 37 ரகத்தில் 400 பிரி கிடைக்கின்றது. இதர குறுகிய கால ரகங்களைப் போல் ஆடுதுறை 37 ரகம் (வயது 108 நாட்கள்) பூச்சி, வியாதிகளால் தாக்கப்படுவதில்லை. இந்த நெல் ரகத்தின் நெல்மணிகள் உருண்டை வடிவத்தில் நல்ல எடை உள்ளதாகவும் இருப்பதினால் கோடையில் உஷ்ணக் காற்றினால் பாதிக்கப் படுவதில்லை.

விவசாயி ஒருவரது அனுபவம்: கடும் வறட்சி பகுதியில் விவசாயி ஒருவர் வைகாசியில் ஆடுதுறை 37 ரகத்தை சாகுபடி செய்தார். இவர் வைகாசியில் பின் பகுதியில் நாற்றுவிட்டு ஆனியில் நாற்றுக்களை வயலில் நட்டார். ஆடுதுறை 37 ரகத்தில் விதைத்தூக்கம் உள்ளதால் விவசாயி விதையை சற்று கூடுதலாக உபயோகித்தார். நாற்றங் காலில் மூன்றாங்கொம்பு நாற்றாக விதைத்தார். நாற்றங்காலுக்கு எருக்கந்தழை 6 சால் கலப்பை உழவும், நான்கு சால் பட்லர் ஓட்டியும் கடைசி உழவின்போது 8 கிலோ டி.ஏ.பி. உரமும் போட்டார். நடவு வயலில் முன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த உலர்ந்த செடிகள் அதிகம் இருந்தன. நடவு வயலில் 6 சால் கலப்பை உழவு செய்து வேர்க்கடலை செடிகள் பூமியில் அமுக்கப் பட்டது. பிறகு 2 சால் பட்லர் உழவு செய்யப்பட்டது. கடைசி உழவின்போது காம்ப்ளக்ஸ் உரம் 17:17:17 ஏக்கருக்கு 2 மூடைகள் இடப்பட்டன. இதோடு ஏக்கருக்கு அரை மூடை யூரியா இடப்பட்டது. பிறகு 30-34 நாட்கள் வயதுடை நாற்றுக்கள் குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடப்பட்டன. நாற்றினை நடுவதற்கு முன் வயலில் பொடி செய்யப்பட்ட 10 கிலோ ஜிங்க் சல்பேட் தூவப்பட்டது. நடவு செய்த 3ம் நாள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் சாட்டர்ன் களைக்கொல்லி இடப்பட்டது. நடவு நட்ட 10ம் நாள் 20 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 17ம் நாள் 10 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 2ம் நாள் ஒரு களை + 10 கிலோ யூரியா + 15 கிலோ பொட்டாஷ், நடவு நட்ட 40ம் நாள் 20 கிலோ யூரியா + 5 கிலோ பொட்டாஷ் இடப்பட்டன. மேற்கண்ட உரங்களை மண் பரிசோதனை செய்து அதில் கிடைத்த சிபாரிசுப்படி விவசாயி இட்டார். பயிர் நட்ட 87வது நாள் அறுவடை செய்யப்பட்டது. ஏக்கரில் 80 கிலோ மூடைகள் 30 (மொத்தம் 2,400 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. ஏக்கரில் ரூ.800 மதிப்புள்ள வைக்கோலும் கிடைத்தது.

பொருளாதாரம்:

மூடை விலை ரூ.600 வீதம் 30 மூடை விலை - ரூ.18,000. வைக்கோல் மதிப்பு ரூ.800. சாகுபடி செலவு ரூ.10,000. நிகர லாபம் ரூ.8,000.

கடும் கோடை, வறட்சி போன்ற சூழ்நிலைகளில் ரூ.8,000 லாபத்தைக் கொடுத்த ஆடுதுறை 37 ரகம் வைகாசி பட்டத்திற்கு சிறந்தது என்பதை காட்டுகின்றது.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us