/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மா, கத்திரி பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை
/
மா, கத்திரி பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை
PUBLISHED ON : ஜூலை 31, 2019
கத்திரி, மா பயிரிட்டுள்ள கிராம விவசாயிகள், பயிர் காப்பீடு செய்வது குறித்து, காஞ்சிபுரம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர், பொ.இம்மானுவேல் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சித்தாமூர், லத்துார், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களில், கத்திரி மற்றும் மா சாகுபடி செய்துள்ள சில கிராம விவசாயிகள் மட்டும், தோட்டக்கலைத் துறை பயிர் காப்பீடு செய்யலாம்.
ஒரு ஹெக்டேர் கத்திரிக்கு, 2,532 ரூபாய்; 1 ஹெக்டேர் மாந்தோப்புக்கு, 2,149 ரூபாய், 'பிரீமியம்' தொகை செலுத்தலாம்.
கத்திரி விவசாயிகள், செப்., 30ம் தேதி வரையிலும், மா விவசாயிகள், அக்., 1ம் தேதி வரையிலும், கூட்டுறவு கடன் சங்கம்; இ - சேவை மையம்; தேசிய வங்கிகளில், காப்பீட்டு தொகை செலுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 044 - 2722 2545

