PUBLISHED ON : ஜூலை 31, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தவரை சாகுபடி செய்தால், கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
இது குறித்து, புரிசை கிராமத்தைச் சேர்ந்த, முன்னோடி விவசாயி, எம்.முருகவேல் கூறியதாவது:
கொத்தவரை, வைகாசி முதல், கார்த்திகை மாதம் வரை, சாகுபடி செய்யலாம். நிலத்தில், அதிக தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான், 30 சென்ட் நிலத்தில், கொத்தவரை சாகுபடி செய்து, 45வது நாள் முதல், காய் அறுவடை செய்து வருகிறேன். 40 அறுவடை வரை, குறையாமல், கொத்தவரைக்காய் கிடைக்கிறது.
மூன்று மாதங்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை, வருவாய் பார்க்கலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தில், கொத்தவரை சாகுபடி செய்யும் போது, தினசரி காய் பறித்தால் கூட, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 85086 26152

