/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விதை நேர்த்தி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்
/
விதை நேர்த்தி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்
PUBLISHED ON : ஜூலை 31, 2019

ஆடி பட்டத்தில், விதை கெடாமல் இருக்க, விதை நேர்த்தி செய்வது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய, பூச்சியில் துறை உதவி பேராசிரியை, வி.ஏ.விஜயசாந்தி கூறியதாவது:
ஆடி பட்டத்தில், நெல் மற்றும் காய்கறி பயிர்களை பயிரிட விரும்பும் விவசாயிகள் சிலர், விதை நேர்த்தி செய்யலாம்.
ஒரு கிலோ விதையில், 10 கிராம் சூடோமோனாசை, தேவையான நீரில் கரைத்து, விதைகளை நனைக்க வேண்டும். விதைகளை வடி கட்டிய பின், ஈர சாக்கில் கட்டி, முளைப்பு வந்த பின் விதைக்கலாம்.
இவ்வாறு, விதை நேர்த்தி செய்வதன் மூலமாக, விதைகளின் வீரியம் குறையாமல் இருக்கும்.
விதைப்புக்கு பின், வேர் அழுகல் நோய், மண் மூலம் பரவும் பூஞ்சான நோய் தாக்காமல், பயிர் நன்கு வளரும். கூடுதல் மகசூலும் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 80723 31266

