sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வேளாண் சோலார் புரட்சி

/

வேளாண் சோலார் புரட்சி

வேளாண் சோலார் புரட்சி

வேளாண் சோலார் புரட்சி


PUBLISHED ON : நவ 21, 2018

Google News

PUBLISHED ON : நவ 21, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய விவசாயிகளின் பொருளாதார வறட்சியை போக்கி வருமானத்தை அதிகரிக்க சூரிய ஒளி தொழில்நுட்பம் பெரும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது. சூரிய ஒளியை விவசாயத்திற்கு பயன்படுத்த பல வழி முறைகள் உள்ளன. பயிர் பாதுகாக்க உதவும் சோலார் பேனல் பொருத்திய விளக்கு பொறிகள் மானிய விலையில் வேளாண்துறை வழங்குகிறது. இதே போல் தமிழக அரசின் வேளாண் பொறியில் துறை 'சோலார் டிரையர்' என்ற சூரியஒளி உலர்களம் மானிய விலையில் வழங்குகிறது.

சோலார் டிரையர்

விவசாயிகளின் விளைநிலத்தில் விளையும் தேங்காய், மாங்காய், காய்கறிகள், பந்தல் வகை பயிர்கள் நன்கு வளர்ந்த பின் மதிப்புக்கூட்டி விற்க சோலார் டிரையர் உதவும்.

தேங்காய் நன்கு விளைந்ததும் கொப்பரையை காய வைக்கலாம். மாங்காய், உறுகாய், அடை மாங்காய், மாம்பழ தகடு, காய்கறி, வற்றல் தயாரிக்கும் தொழில் துவங்கலாம். அரசு மானியம், வங்கி கடன் உதவியுடன் 5 ஏக்கர் பரப்புக்கு மேல் தென்னை, காய்கறி சாகுபடி செய்யும்

விவசாயிகள் வருமானத்தை ஐந்து மடங்கு அதிகரிக்க

சிறியளவில் முதலீடு, சிறிய இடம் இருந்தாலே போதும் அங்கு டிரையர் அமைக்கலாம். திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டோ, சாக்குகள் விரித்தோ விளை பொருட்களை காய வைக்கும் போது ஒரே மாதிரியான வெப்பநிலை இல்லாமல் போனால் காய வைப்பதில் தாமதம் ஏற்படும். மிளகாய் வற்றல், கத்தரி வற்றல் மட்டுமல்ல மீன் வளர்ப்போர் கருவாடு தயாரிக்கவும் சோலார் டிரையர் உதவும்.

மானியம்

மூலிகை பயன்பாட்டிற்கு குறிப்பாக துளசி, கடுக்காய், ஜாதிக்காய், கறிவேப்பிலை, செடிமுருங்கை, முருங்கை விதைகளை காய வைக்கலாம். கொப்பரையை காய வைக்கும் போது தரமான தேங்காய் எண்ணெய் பெற சோலார் உலர் கலன் உதவும். காற்று அதிகமாக இருக்கும் இடத்தில் சோலார் டிரையரை பாதுகாப்பாக அமைக்க வேண்டும். சிறிய அளவு சோலார் டிரையர் 410 சதுரடி பரப்பில் டிரே, டிராலி இல்லாமல் அமைக்க 3 லட்சத்தி 25 ஆயிரத்து 540 ரூபாய் தேவை. மானியமாக 1 லட்சத்தி 62 ஆயிரத்து 770 ரூபாய் தரப்படும். 620 சதுரடிக்கு 4 லட்சத்தி 89 ஆயிரத்து 25 ரூபாய் தேவை. மானியமாக 2 லட்சத்தி 44 ஆயிரத்து 513 ரூபாய் தரப்படும். சதுரடியை பொறுத்து முதலீடும், மானிய தொகையும் வேறுபடும்.

சோலார் டிரையருக்கு மானியம் பெற வேளாண்மை பொறியியல் துறையிடமும், சோலார் விளக்கு பொறிக்கு மானியம் பெற வேளாண்மை துறையிடமும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், நுண்ணீர்ப் பாசன உத்திகள், இயற்கை வேளாண் இடுபொருள் பயன்பாடு, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊடு பயிர், வேலிப்பயிர், வரப்பு பயிர் சாகுபடி மூலம் அதிக லாபம் பெறலாம்.

- பா.இளங்கோவன்

துணை இயக்குனர்,

வேளாண் இணை இயக்குனர் அலுவலகம்,

தேனி. 98420 07125






      Dinamalar
      Follow us