PUBLISHED ON : ஜூலை 31, 2024

ஜெ.ஜி.எல்., 24423 ஆந்திரா ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எல்.வெங்கடேசன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், ஜெ.ஜி.எல்., 24423 ஆந்திரா ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, மோட்டா ரகத்தை சார்ந்தது. நம்மூர் மணல் கலந்த களிமண்ணுக்கு அருமையாக விளைகிறது.
நெல் நாற்று நடவு நட்டு, சரியாக 90 நாளில் விளைச்சல் அறுவடைக்கு வருகிறது. இந்த ரகத்தில், பூச்சி தாக்குதல் வெகு குறைவாக இருக்கிறது. உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால், 3,600 கிலோ நெல் மகசூல் பெறலாம் என, ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.
அவர்கள் பரிந்துரை செய்த மகசூலை காட்டிலும், 400 கிலோ கூடுதல் மகசூல் எடுக்க முடிந்தது. இந்த ரக நெல்லுக்கு, நெற்கதிர் முதிர்வு பெறும் போது பாய்ச்சப்படும் தண்ணீரை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.
அந்த ஈரத்தில் நெற்கதிர்கள் முற்றிய பின், அறுவடை செய்துவிடலாம். இல்லை எனில், நெற்கதிர்கள், நெல்லின் பளு தாங்க முடியாமல் நிலத்தில் சாய்ந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எல்.வெங்கடேசன்,
94453 35139