/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஈத்தாமொழி ரக தென்னை விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்
/
ஈத்தாமொழி ரக தென்னை விவசாயிகளுக்கு ஏற்ற ரகம்
PUBLISHED ON : ஜூலை 31, 2024

ஈத்தாமொழி ரக தென்னை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி நெட்டை ரக தென்னை சாகுபடி செய்துள்ளேன்.
இது, புவிசார் குறியீடு பெற்ற ரகமாகும். இந்த ரக தென்னை சாகுபடி செய்யும்போது, நோய் தாக்குதல் குறைவாக உள்ளது.
குறிப்பாக, கருவண்டு, குருத்து நோய், பிஞ்சி உதிரல் ஆகிய நோய்கள் அறவே இல்லை. குட்டை மற்றும் நெட்டை ரகங்களுக்கு, உரம் பராமரிப்பு செலவு அதிகமாக தேவைப்படும். இந்த ரகத்திற்கு, உரச்செலவு தேவைப்படாது.
இந்த ரகத்தின் தேங்காய், 700 கிராம் வரைக்கும் இருக்கும். இந்த தேங்காய் பருப்பில் எண்ணெய் சத்து அதிகமாக இருப்பதால், தேங்காய் எண்ணெய்யாக மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு ஏற்ற ரகம் என, கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்
98419 86400