sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மல்லிகை விவசாயிகள் கவனத்திற்கு...

/

மல்லிகை விவசாயிகள் கவனத்திற்கு...

மல்லிகை விவசாயிகள் கவனத்திற்கு...

மல்லிகை விவசாயிகள் கவனத்திற்கு...


PUBLISHED ON : மே 16, 2012

Google News

PUBLISHED ON : மே 16, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் சிறப்பாக மல்லிகை சாகுபடி செய்து விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆனால் கோடை காலம் துவங்கிவிட்டது. பூ மொட்டுகள் பழுப்பு நிறமடைவதை பலரும் காண்கிறோம். அவ்வாறு உங்கள் மல்லிகைப்பயிரில் பூ மொட்டுகள் பழுப்பு நிறமடைந்திருக்கின்றனவா? பாதித்த மலர் கொத்துகளை வளைத்து ஒரு வெள்ளை நிற அட்டையில் தட்டுங்கள். உற்று நோக்கினால், மிகச்சிறிய மெலிந்த பழுப்பு மற்றும் மஞ்சள் நிற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம். இப்பூச்சிகள் மலர்ப்பேன்கள் எனப்படும். இப் பூச்சிகளின் தாக்குதலால் பூ மொட்டுகள் வெண்மை நிறம் மாறி பழுப்பு நிறமடையும். மலர்க்காம்புகள் சிறுத்துவிடும். மேலும் மலர்ப்பேன் தாக்கிய மொட்டுகள் மலர்ந்து விரிவதில்லை. எனவே இவை சந்தையில் குறைந்த விலைக்கே போகும்.

உகந்த சூழ்நிலை: வறண்ட வெப்பமான சூழ்நிலையில் மலர்ப்பேன்கள் விரைந்து பெருகுகின்றன. தொடர்மழை பேன்களின் எண்ணிக்கையினைக் குறைத்துவிடும். தெளிப்பு நீர் பாசன முறையில் பாசனவசதி பெறும் மல்லிகைப்பயிரில் மலர்ப்பேன் தாக்குதல் மிகக் குறைந்தே காணப்படும்.

இவை விளைவிக்கும் சேதம்: மலர்ப்பேன்கள் சுமார் ஒரு மில்லிமீட்டர் நீளமானவை. முதிர்ந்த பூச்சிகள் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். குஞ்சுகள் மஞ்சள் நிறைந்தவை. மலர்ப்பேன்களும் அவற்றின் குஞ்சுகளும் மலர் மொட்டுகளின் திசுக்களைச் சுரண்டி வெளியாகும் சாற்றினை உறிஞ்சி குடிக்கின்றன. திசுக்கள் பெருமளவு சுரண்டப் படுவதால் அவை காய்ந்து பழுப்பு நிறமடைந்துவிடுகின்றன. பயிர்ச்சாறு வெளியேறுவதால் மொட்டுகளின் வளர்ச்சி தடைபட்டு அளவு சிறுத்துவிடுகின்றன. காம்புகளின் நீளமும் குறைந்துவிடுகின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த: சமச்சீரான அளவில் பரிந்துரைக்கப்படும் விகிதத்தில் உரங்கள் இடப்பட்ட பயிர் பூச்சிகளின் சேதத்தினை தாங்கி வளர இயலும். மல்லிகை பயிருக்கு ஆண்டுக்கு இரு தடவையாக அதாவது கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், ஜூன்,ஜூலை மாதங்களில் மறு முறையுமாக இரு தடவைகளாக கீழ்க்கண்ட உரங்களைப் பிரித்து இடவேண்டும். செடி ஒன்றுக்கு நன்கு மக்கிய தொழு உரம் பத்து கிலோ, தழைச்சத்து 60 கிராம் (யூரியா 130 கிராம்), மணிச்சத்து 120 கிராம் (சூப்பர் பாஸ்பேட் 750 கிராம் அல்லது ஸ்பிக் டி.ஏ.பி.300 கிராம்), சாம்பல் சத்து 120 கிராம் (மியூரியேட் ஆப் பொட்டாஷ் 200 கிராம்) வீதம் தேவை.

வசதிப்படும் இடங்களில் தெளிப்பு நீர்பாசன முறையில் (ஸ்பிரிங்க்ளர் இர்ரிகேஷன்) வறண்ட வெப்பமான மாதங்களில் மட்டும் பாசனம் ஏற்படுத்தலாம். மலர்ப்பேன் தாக்குதல் தீவிரப்பட்டால் மோனோகுரோட்டோ பாஸ் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மேலும் மருந்து கரைசல், பயிரில் குறிப்பாக பூங்கொத்துக்களில் நன்கு படுவதற்காக, வேளாண்மைக்காக திரவ தெளிப்புகளில் (சாண்டோவிட், ஸ்டிக்கால், அக்ரோவெட், ஹைவெட், பைட்டோவெட், இண்ட்ரான் - வணிகப்பெயர்கள்) ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு வார இடைவெளியில் மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.

நிறம் மாறிய மல்லிகை இலைகள்: உங்கள் மல்லிகைப்பயிரில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதைக் கவனித்தி ருப்பீர்கள். இரும்புச்சத்து பற்றாக்குறை, செஞ்சிலந்தி தாக்குதல் என பல்வேறு காரணங்களினால் இந்நிறமாற்றம் ஏற்படலாம். அக்காரணிகளின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

இரும்புச்சத்து பற்றாக்குறை: முதலில் வெளிர் பச்சை நிறம், பின்னர் மஞ்சள் நிறம் இளம் இலைகளில் தோன்றி, பின்னர் முதிர்ந்த இலைகளுக்குப் பரவினால், இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தெரிந்துகொள்ளலாம். வெப்பமான சூழ்நிலைகளில் சுண்ணாம்பு சத்துமிக்க நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பயிரில் இப்பிரச்னை ஏற்பட்டால் பெர்ரஸ் சல்பேட் எனப்படும் அன்னபேதி உப்பினை 0.5 சத அளவில் (ஒ ரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வீதம்) கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் படும்படி குறிப்பாக இலைகளின் கீழ்புறமும் படும்படி தெளித்தால் சில நாட்களில் பாதித்த இலைகள் மீண்டும் பச்சை நிறம் அடைவதைக் காணலாம்.

பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை அன்னபேதிக் கரைசல் தேவைப்படும்.

செஞ்சிலந்தி தாக்குதல்: பாதிப்பு முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி பின்னர் இளம் இலைகளுக்கு பரவும். மஞ்சள் நிறப்புள்ளிகளைப் போல் இலைகளின் மேற்புறம் ஏற்படும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் மெல்லிய நூலாம்படையும் அதனுள் சிவப்புநிற சிறிய பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காணமுடியும்.

உருப்பெருக்கி கொண்டு பார்த்தால் அப்பூச்சிகள் எட்டுக்கால்கள் கொண்டனவாக இருப்பதினைக் கவனிக்க இயலும். இப்பூச்சிகள் செவ்வுண்ணி என்றும் அழைக்கப்படும். தாக்குதல் தீவிரப்பட்டால், இலைகள் முற்றிலும் வெளுத்து காய்ந்து கீழே உதிர்ந்துவிடுகின்றன. வறண்ட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தி தாக்குதல் குறையும். செஞ்சிலந்திப் பூக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் வீதம் நனையும் கந்தகம் மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், 15 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படி தெளிக்க வேண்டும்.

மருந்துக்கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், அக்ரோவிட், ஹைவெப், பைட்டோவெட், ஸ்டிக்கால், இண்ட்ரான் - வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். மதுரை மண்டல மல்லிகை விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டால் வெற்றிகரமான விவசாயிகளாக திகழலாம்.

எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர், 97503 33829.






      Dinamalar
      Follow us