sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்)

/

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்)

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்)

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் (இலைவழி நுண்ணூட்ட உரம்)


PUBLISHED ON : மார் 16, 2011

Google News

PUBLISHED ON : மார் 16, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழைக்கு நுண்ணூட்டத்தின் அவசியம்: வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற காரணங்களினால் தற்போது நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள் விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

மண்வளம் பாதிக்கப்படுவது, போதிய வேர் வளர்ச்சியின்மை, பாஸ்பரஸ் உரங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங் களினால் நுண்ணூட்டச் சத்தை மண்ணில் இட்டு நிவர்த்தி செய்வது கடினமானதாகும். மண்ணில் இடப்பட்ட நுண்ணூட்டச் சத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்கப்படுகிறது. எனவே விளைச்சல் மற்றும் தரத்தை அதிகப் படுத்துவதற்காக நுண்ணூட்டச் சத்துக்களை இலைவழி தெளித்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தில் மிக முக்கியமான அங்கமாகும்.

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகின்றது.

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தெளிப்பதால் உண்டாகும் பயன்கள்: * நுண்ணூட்டக் குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. * உரத்தின் பயன்பாடு குறைகிறது. * பயிரின் வளர்ச்சி துரிதப் படுத்தப்படுகிறது. * நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.

கலவையில் உள்ள முக்கிய நுண்ணூட்டங்கள்: துத்தநாகம்-3%, போரான்-1.5%, மாங்கனீஸ்-1%, இரும்பு-1.5%.

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: * வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு சாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். *வாழை நட்ட 5வது, 6வது, 7வது, 8வது, 9வது மற்றும் 10வது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.

* வாழை குலை தள்ளிய பின் முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும். * இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக் கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக் கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்கக் கூடாது.

* வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை தயாரித்ததுடன் தெளிக்க வேண்டும். * இந்த நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது. * இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலின் விலை ரூ.125/- கிலோ ஆகும். விவசாயிகள் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர், ப.மாரிமுத்துவை (போன்: 04546-

247 564, 94420 25109) தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

பெ.பச்சைமால், சேர்மன்,
ப.மாரிமுத்து,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி.






      Dinamalar
      Follow us