sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை

/

நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை

நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை

நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை


PUBLISHED ON : அக் 24, 2018

Google News

PUBLISHED ON : அக் 24, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் நன்மை அளிக்கின்றன. இப்பூச்சி இனங்கள் பயிரை தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழ்ந்து, அவை அதிகம் பெருகாமல் பார்த்து கொள்கிறது.

பாதுகாக்கும் முறை: இயற்கை எரு, கம்போஸ்ட் மண்புழு உரம், உயர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா), பசுந்தாள் உரங்கள், (கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு) முதலிய வற்றை பயன்படுத்தி மண்ணில் வாழும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள கிணற்றடிப்பூண்டு அல்லது வெட்டுக்காயத்தழை போன்ற செடிகள் நன்மை செய்யும் குளவிகளை கவரும் தன்மை கொண்டவை. எனவே இவற்றை அழிக்காமல் விட்டு வைக்க வேண்டும். வயலில் பறவை இருக்கைகள், குளவி குடில்கள் அமைக்க வேண்டும்.

நெல் பயிருக்கு வரப்புகளில் பயறு வகை செடிகளான தட்டைப்பயறு, உளுந்து போன்றவை பயிரிட வேண்டும் அல்லது சூரியகாந்தி முதலியவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கலாம்.

நெல் பயிரில் துார் கட்டும் பருவத்திலும், பருத்தியில் 50 - 55 நாட்கள் வரையிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கரும்பு சாகுபடிக்கு பின், அதன் கழிவுகளை வயலில் எரிப்பதை தவிர்த்து மண் வாழ் நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் பொருளாதார சேதங்களை அறிந்து தாவரம் சார்ந்த பூச்சி மருந்துகள், நுண்ணுயிர் பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

பூச்சி மருந்துகளை மாலை நேரங்களில் சரியான அளவில் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம்.

இம்முறையினால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பயிர் பாதிப்பு அடைவதை தடுக்கலாம். தொடர்புக்கு 94435 70289.

தென்னந்தோப்பு, சூரியகாந்தி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து, தேனீ வளர்த்து அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தலாம். பருத்தி, காய்கறி தோட்டங்களில் சுற்றிலும் தேன் மகரந்தங்கள் அதிகம் உள்ள பூக்கள் கொண்ட மக்காச்சோளம், செண்டுப்பூ, சூரியகாந்தி, சோம்பு, எள், கொத்தவரை, வெண்டை போன்றவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

எஸ்.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை.






      Dinamalar
      Follow us