/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
களர் மண்ணிலும் சாகுபடியாகும் பிசினி ரக நெல்
/
களர் மண்ணிலும் சாகுபடியாகும் பிசினி ரக நெல்
PUBLISHED ON : ஜன 08, 2025

பிசினி பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், செம்மண் நிலத்தில், பிசினி பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
பிசினி ரக நெல், 150 நாட்களுக்கு பின் அறுவடைக்கு தயாராகும். இந்த ரகத்தை பொறுத்தவரை, அனைத்து விதமான நிலங்களில்சாகுபடி செய்யலாம்.
குறிப்பாக, களர் உவர் நிலத்திலும் சாகுபடி செய்யலாம். மேலும், வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல் பயிராக உள்ளது. இந்த ரக அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, இடுப்பு வலி உள்ளிட்டபல்வேறு விதமான பிரச்னைகளை சரிசெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்:
96551 56968