/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பாசுமதிக்கு மாற்றாகும் பூசா சுகந்த் 5 ரக நெல்
/
பாசுமதிக்கு மாற்றாகும் பூசா சுகந்த் 5 ரக நெல்
PUBLISHED ON : மார் 12, 2025

பூசா சுகந்த் - 5 ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:
பலவித ரக நெல்சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, பூசா சுகந்த் - 5 ரக நெல் முதல் முறையாக சாகுபடி செய்துள்ளேன்.
இது, 120 நாளில் மகசூலுக்கு வரும். இந்த ரகநெல், ஏறக்குறைய பாசுமதிரகத்தை போல தோற்றத்தில் இருக்கும். பாசுமதி ரக நெல்லை காட்டிலும் சற்று நீளம் குறைவு தான். இருந்தாலும், பாசுமதி ரக நெல்லை போல உருவ ஒற்றுமை இருக்கும்.
டெல்டா மாவட்டங்களில், ௧ ஏக்கருக்கு 30 மூட்டைக்கு மேல் மகசூல்கிடைக்கிறது. நம்மூர் மணல் கலந்த களிமண்மற்றும் களிமண்ணுக்கு அதிக மகசூல் எடுக்க முடியும் என, நம்பிக்கை உள்ளது.
இருப்பினும், நம்மூர் களிமண்ணுக்கு எவ்வளவு மகசூல் கிடைக்கிறது என, மகசூலுக்கு பின் தான் தெரியும்.
இவ்வாறு கூறினார்.
தொடர்புக்கு: ஆர்.தேவராஜ்,
87547 97918.