/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பயறு வகை பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்
/
பயறு வகை பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்
PUBLISHED ON : மார் 12, 2025

பயறு வகை பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
பச்சை பயறு, வேர்க்கடலை, எள், தக்கை பூண்டு ஆகிய பயிர்களில், ஸ்போடாப்டீரா லிட்டுரா என்ற பூச்சியின் தாக்குதல் அதிகமாக காணப்படும்.
இளம் மற்றும் வளர்ந்த புழுக்கள் மண்ணில் குவியல் குவியிலாக இருக்கும். புழுக்கள் முதிர் வடைந்து, பூச்சிகளாக பறந்து, ஆங்காங்கே முட்டையிடும். இது அடுத்த அடுத்த பயிர் என, நகர்ந்துக் கொண்டே இருக்கும்.
இலைகள் மீது அமர்ந்து, அரித்து பயறு வகை பயிர்களை நாசப்படுத்தும். இதனால், பயறு வகை பயிர்களில், அதிக மகசூல் இழப்பு ஏற்படும். இதைகட்டுப்படுத்த, 2.5ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து, தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
கூட்டுப்புழுக்களை அழித்த, 'டி' வடிவிலான குச்சிகளை 1 ஏக்கருக்கு நான்கு இடங்களில் அமைக்கலாம். மேலும், 5 கிலோ தவிடு, 500 கிராம் வெல்லம், 3 லிட்டர் ப்யூரடான் கலந்து, நச்சு கவர்ச்சி உணவு உருண்டைகளாக தயாரித்துவயலில் வைத்து கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
இது தவிர, 5 சதவீதம் எமாமெக்டின் பென்சோயேட், 16 மில்லி குளோரான்டிரினிலி ப்ரோல், 11.7 சதவீதம் ஸ்பைனடோரம் ஆகிய பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
-முனைவர் செ.சுதாஷா,
திரூர்.
97910 15355.