sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஆமணக்கு ஒய்.ஆர்.சி.எச்.1

/

ஆமணக்கு ஒய்.ஆர்.சி.எச்.1

ஆமணக்கு ஒய்.ஆர்.சி.எச்.1

ஆமணக்கு ஒய்.ஆர்.சி.எச்.1


PUBLISHED ON : ஜூலை 13, 2011

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவீன தொழில்நுட்பம்

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒய்.ஆர்.சி.எச்.1 என்ற வீரிய ஒட்டு ஆமணக்கு 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. குறை வான வயது உடையதால் மானாவாரிக்கும், பாசனநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றது.

150-180 நாட்கள் வயதுஉடையது. அதிக கிளைப்பு, நடுத்தர உயரம், அதிக விளைச்சல். மானாவாரியில் எக்டருக்கு 1860 கிலோவும் இறவையில் 3500 கிலோவும் கொடுக்கவல்லது. காய் குலைகளில் பெண் பூக்களின் அளவு 95 சதவீதத்திற்கு மேல் இருக்கும். செடிகள் சாயாத, காய்கள் வெடிக்காத தன்மையைக் கொண்ட, அதிக உரமேற்கும் திறனும் கொண்டவை.

குறுகிய கால இடைவெளியில் அதிக குலைகள் (40-50) ஒரு செடிக்கு வைக்கும் பண்புடையது. செடியின் உயரமும் கிளைகளின் நீளமும் குறைவாக உள்ளதால் ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றது. குறைவான வயதுடைய காரணத்தினால் தமிழகத்தில் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது காய் அழுகல் நோய் தாக்குதல் குறைவாக உள்ளது. குறைவான பச்சை தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதல், காய்ப்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத்தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. வெப்பநிலை 20 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை நல்ல பலனைத் தரக்கூடியது. வெப்பநிலை அதிகமானால் ஆண்பூக்கள் அதிகம் தோன்றி விளைச்சல் குறையும். மழைஅளவு 750மி.மீ. அளவு ஆண்டுக்கு இருக்க வேண்டும். நீர் தேங்கி நிற்கும் நிலத்தில் பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மானாவாரியில் ஜூன் - ஜூலை (ஆடிப்பட்டம்) இறவை - ஜூன் - ஜூலை (ஆடிப்பட்டம்), நவம்பர் - டிசம்பர் (கார்த்திகைப்பட்டம்) ஆகிய பட்டத்தில் 90 து 60 செ.மீ. இடைவெளியில் இறவையில் 120 து 90 செ.மீ. இடைவெளியிலும் பயிரிடலாம். ஒரு கிலோ விதைக்கு கார்பண்டாசிம் 2 கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். டிரைகோடெர்மா விரிடி உயிர்ப்பூசணம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதையை நேர்த்தி செய்ய வேண்டும். விதையினை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். குத்துக்கு ஒரு விதை விதைக்க வேண்டும்.

இறவையில் எக்டருக்கு 12.5 டன் தொழு உரமும், 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இடவேண்டும். அதாவது 30:30:30 கிலோ உரங்களை அடியுரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழை உரத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30வது நாளும், 60வது நாளும் இடவேண்டும். மானாவாரியில் 45:15:15 கிலோ தேவைப்படும். 30:15:15 கிலோவை அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச்சத்தை மேலுரமாக மழை கிடைக்கும் போது 40-60 நாட்களுக்குள் இடவேண்டும். நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு முறையும், உயிர்த் தண்ணீருக்கு பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10-15 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நீர் நிலத்தில் நீண்டகாலத்திற்கு தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இரண்டு விதை முளைத்த இடத்தில் 10-15வது நாளில் ஒரு செடியை அகற்ற வேண்டும். முளைக்காத இடத்தில் மீண்டும் விதைத்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். விதைத்த 3 நாட்களுக்குள் புளூகுளோரலின் ஏக்கருக்கு 800 மிலி அல்லது பெண்டிமெதிலின் 1300 மிலி தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 20, 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். ஆமணக்கில் இலைப்புழுக்கள் (காவடிப்புழு, புரோடீனியா, கம்பளிப்புழுக்கள்), சாறு உறிஞ்சும் பூச்சிகள் (தத்துப்பூச்சி, சிவப்பு சிலந்தி பூச்சி), காய்ப்புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (தகவல்: சா.ரா.வெங்கடாசலம், வீ.பழனிச்சாமி, கு.செல்வராணி, பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் வேளாண் விரிவாக்கம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம். 94432 10883.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us