/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சம்பா பருவ சாகுபடி விதைகள் தரம் பரிசோதிக்கலாம்
/
சம்பா பருவ சாகுபடி விதைகள் தரம் பரிசோதிக்கலாம்
PUBLISHED ON : ஜூலை 24, 2024
சம்பா பருவத்திற்கு தரமான விதைகளை தேர்வு செய்து பரிசோதனை செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் கு.ஜெயராமன் கூறியதாவது:
சம்பா பருவத்திற்கு, ஏடிடீ - 54, 5204, ஆர்என்ஆர் - 15048, டிகேஎம் - 13, ஏஎஸ்டி - 1009, டிபிஎஸ் - 5 மற்றும் கருப்பு கவுனி, சீரகசம்பா, ஆத்துார் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, காட்டுயானம் ஆகிய ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
இந்த விதைகளை, விவசாயிகள் தரம் அறிந்து சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு, 100 கிராம் விதை மாதிரி எடுத்து, காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை நிலையத்தில், 80 ரூபாய் கட்டணம் செலுத்தி, முளைப்பு திறன், புறத்துாய்மை, கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக, தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: - கு.ஜெயராமன், 95974 42347.