/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஆகாயத்தாமரை இலைகளிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்
/
ஆகாயத்தாமரை இலைகளிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்
PUBLISHED ON : ஜூலை 24, 2024

ஆகாயத்தாமரை இலைகளில், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து, ஓய்வு பெற்ற வேளாண் கூடுதல் இயக்குனர் முனைவர் பா.இளங்கோவன் கூறியதாவது:
ஏரி, குளம், வயல்களில், ஆகாயத்தாமரை மற்றும் தாமரை செடிகள் அதிகமாக வளரும் தன்மை உடையது. ஒரு ஆகாயத்தாமரை மற்றும் தாமரைச்செடி, 1 லிட்டர் தண்ணீரை ஆவியாக்கும் தன்மை உடையது. இதனால், ஏரி, குளம், வயலில் தண்ணீர் தேங்குவதை முற்றிலும் தடுக்கும் செடியாக உள்ளது.
இதை கட்டுப்படுத்துவதற்கு, நீர் நிலைகள் மற்றும் வயல்களில் இருக்கும் ஆகாய தாமரை மற்றும் தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.
இல்லை எனில், ஏஜி - 11 என்னும் அங்கக திரவத்தை, ஆகாய தாமரை மற்றும் தாமரை இலைகள் மீது தெளிக்கலாம். அவ்வாறு தெளித்தால், 15 நாட்களில் செடிகள் காய்ந்து விடும். அதன்பின், நீரில் இருந்து எடுத்து தாமரை செடிகளை வெளியே போடலாம்.
மீண்டும் ஒரு முறை ஏஜி - 11 திரவத்தை தெளித்து காய வைக்க வேண்டும்.இதை ஒரு குழியில் போட்டு அதில் மண்புழுக்களை விட்டால், ஆகாய தாமரை மற்றும் தாமரை இலைகளை மண்புழுக்கள் உண்டு, அதன் எச்சத்தை உரமாக மாற்றும்.
இதை காய்கறி, நெல் உள்ளிட்ட பல வித பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.இளங்கோவன்,
98420 07125.