/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த டிப்ஸ்
/
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த டிப்ஸ்
PUBLISHED ON : ஜூலை 24, 2024

பூவில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி ஆகிய பூக்கள் பயிரிடப்படுகின்றன.
பெரும்பாலான பூக்கள் சாகுபடியில், வேர் அழுகல் நோய் தாக்கம் ஏற்படும். இதை கண்காணித்து தடுக்க வேண்டும்.
இல்லை எனில், மகசூல் இழப்பு ஏற்படும்.குறிப்பாக, மண்ணில் பியூசேரியம், ஸ்கீலீரோஷியம், பித்தியம், மேக்ரோபோமினா பேசியோலினா ஆகிய பூஞ்சாணங்களால், வேர் அழுகல் நோய் தாக்கம் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட பூச்செடிகள் பழுப்பு நிறம், கருமை நிறத்தில் மாறி, மெல்ல மெல்ல இறக்க நேரிடும். சில நேரங்களில் அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதால், ஈரத்தின் வெப்பம் சேர்ந்து நோய்வரக் காரணமாக அமைகிறது.
இதைத் தவிர்க்க, ட்ரைகோடெர்மா விரிடி, ட்ரைகோடெர்மா ஆர்சியானம் ஆகிய பூஞ்சாண உயிர்க்கொல்லி மருந்துகளை, 1 கிலோவிற்கு, 4 கிராமில் விதை நேர்த்தி செய்யலாம்.
மேலும், கார்பன்டெசிம் பூஞ்சாணக் கொல்லி வாயிலாகவும் விதை நேர்த்தி செய்யலாம். நோய் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.
அதிக தண்ணீரை பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். 2,000 கிலோ தொழு உரத்துடன், 1 ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து தெளிக்கலாம்.
ட்ரைகோடெர்மா விரிடி, ட்ரைகோடெர்மா ஆர்சியானம் ஆகிய பூஞ்சாண உயிர்க்கொல்லி மருந்துகளை, 1 ஏக்கருக்கு 1 கிலோ மண்ணில் சேர்க்க வேண்டும்.
காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராம், டை பெங்கோணசோல் 0.5 லிட்டர், டிரை ப்ளாக்சி ஸ்ட்ரோபின், புகோனோசோல் 0.75 கிராம் ஆகியவற்றையும், மண்ணில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்தால், பூக்கள் சாகுபடியில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தி, பூக்கள் சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
திருவள்ளூர்.
97910 15355.