sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோழிக்குஞ்சு பராமரிப்பு

/

கோழிக்குஞ்சு பராமரிப்பு

கோழிக்குஞ்சு பராமரிப்பு

கோழிக்குஞ்சு பராமரிப்பு


PUBLISHED ON : டிச 28, 2011

Google News

PUBLISHED ON : டிச 28, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். சிலநாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக் கூடிய நிலையில் இருக்கலாம். குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும்போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்துவிட வேண்டும். குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழை வாயிலிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக்கொள்ளுதல் நலம். கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்க வேண்டும். 8 கிராம் குளூக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல்நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். எதிர்ப்பொருளும் விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம். வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்க வேண்டும். ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்க விடவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும். வளரும் குஞ்சுகள்

பராமரிப்பு: 6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கிவிடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கிவிட வேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095 - 0.19 மீ2 என்ற அளவு இடவசதி இருக்க வேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்க வேண்டும். நீர் மற்றும் தீவனம்: தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும் தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்க வேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ. உயரத்தில் வைக்க வேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்க வேண்டும். 2.25 செ.மீ. ஒரு ஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்க வேண்டும். அலகு நீக்கம் செய்தல்: அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத் தானே உண்ணுதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒரு பங்கும், கீழ் அலகில் சிறிதளவு மட்டும் நீக்க வேண்டும். இது குஞ்சுபொரித்து, ஒரு வார காலத்திற்குள் செய்துவிட வேண்டும். மீண்டும் ஒருமுறை முட்டையிடுவதற்கு முட்டையிடும் கூட்டினுள்

விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்ய வேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகுநீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சிபெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். கொண்டை நீக்கம்: கொண்டையானது தொங்கிக்கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்துவிட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், தாராபுரம்.

-ஆர்.ஜி.ரீஹானா, 98944 84806.






      Dinamalar
      Follow us