
காடை வளர்ப்பு: காடை என்று சொன்னால் அது காட்டுக்காடையைத் தான் குறிக்கும். ஆனால் இறைச்சிக்காக வளர்க்கப்படும் காடை பொதுவாக 'ஜப்பானியக்காடை' என்று அழைக்கப்படும். ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தக்காடை இனத்தை நம் நாட்டிற்கு ஏற்றபடி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஏறத்தாழ ஒன்றரை மாதத்தில் விற்பனைக்கு தயாராகிவிடும். வெப்பத்தை விரும்பும் ஜப்பானிய காடை தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ற ஒரு பறவை. இதன் இறைச்சி ருசியாக இருக்கும். சிறிய இடத்தில்கூட கூண்டில் வளர்க்கலாம். ஜப்பானியக்காடை வளர்க்க நினைப்பவர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன் தங்கள் பகுதி கால்நடை மருத்துவரிடம் இவர் ஜப்பானியக் காடைதான் (ஞிணிtதட்டிது ஒச்ணீணிணடிஞிச் ணிணூ ஒச்ணீச்ணஞுண்ஞு ணுதச்டிடூ) வளர்க்கிறார் என்று விலங்கியல் பெயரிட்டு (த்ணிணிடூணிஞ்டிஞிச்டூ) சான்றிதழ் சமர்ப்பித்தால் போதும். குறிப்பிட்ட பகுதி கால்நடை மருத்துவருக்கு இதைக்குறித்து தகவல் தெரியவில்லை என்றால் உங்கள் பகுதி கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், (திருப்பூர், திருப்பரங்குன்றம், குன்றக்குடி) தலைவரை அணுகி சான்றிதழ் பெறலாம். பண்ணையைத் தொடங்குவதற்கு முன் கால்நடை பயிற்சி மையங்கள் நடத்தும் 'காடை வளர்ப்பு பயிற்சி' பெறுவது நல்லது. இங்கு வழங்கப்படும் சான்றிதழ் வங்கி கடன்பெற உதவியாக இருக்கும்.
தொடர்புக்கு 'இணை பேராசிரியர் மற்றும் தலைவர், ஆராய்சி மற்றும் பயிற்சி மையம், கால்நடை பல்கலைக்கழகம், காமராஜர் சாலை, கால்நடை மருத்துவ வளாகம், திருப்பூர்-640 604. போன்: 0421-224 8524'.
மொலாசஸ் - எனப்படும் கரும்பு ஆலைக்கழிவை பயன்படுத்தி தீவனத்தை கால்நடைகளுக்கு கொடுப்பது வழக்கமாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. மொலாசசில் ஏராளமான ரசாயனம் கலந்திருக்கும். அதை மாட்டுக்கு கொடுப்பதால் அதன் உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்கும். மொலாசஸ் கலந்த தீவனம் கொடுக்கப்படும் மாடுகள் நன்கு குண்டாகிவிடும். இதனால் மாடுகள் சினைபிடிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குளூகோஸ் எனப்படும் இனிப்புக்காகத்தான் இதனை தீவனத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் 'எல்.ஆர்' எனப்படும் லேக்டோ மீட்டரின் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும். இந்த அளவை வைத்துத்தான் பாலில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துக்களின் அளவை அறிய முடியும். தரமான பால் என்றால் 27 டிகிரி எல்.ஆர். இருக்க வேண்டும். இது குறைந்தால் அந்த பால் தரத்திலும் குறைந்தது என்று மதிப்பிடப் படுகிறது. எல்.ஆர். நன்றாக இருந்தால் பால் மணமுடன் இருக்கும். விலையும் கூடுதலாக கிடைக்கும்.
தினமும் மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் 10 கிராம் அளவுக்கு இந்த குளூக்கோஸ் இருக்க வேண்டும். இதற்காக மொலாசசைப் பயன்படுத்துவதைவிட பனைவெல்லம் அல்லது சல்பர் கலக்காத நாட்டுச்சர்க்கரைøயை
தீவனத்துடன் வைத்து கொடுக்கலாம். இதனால் மாடுகள் தீவனத்தை நன்றாக சாப்பிடும். பால் சுரப்புத்தன்மையும் கூடும். எல்.ஆர்.டிகிரியும் சராசரியாக 27 வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
(தகவல்: டாக்டர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர், (கால்நடைகளுக்கு இயற்கைவழி மருத்துவம் செய்பவர்), கொடுமுடி). -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

