PUBLISHED ON : ஆக 07, 2013

விவசாயிகளுக்காக தேங்காய் உடைக்கும் இயந்திரம் கோவை மாவட்டம், சிட்கோவைச் சேர்ந்த வேலுச்சாமி (98430 33808) வடிவமைத்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆட்கள் பிரச்னை விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய இந்த தேங்காய் உடைக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது மின் மோட்டார் 3 குதிரைத்திறன் உள்ளதாக உள்ளது. உட்செலுத்தும் கலன், நெம்புகோல் தத்துவம், பிளேடு ஆகியவை அமைப்பில் உள்ளன. மட்டையிலிருந்து உரித்த தேங்காயை இரண் டாக பிரிக்கும் திறன் உள்ளது. ஒரு மணிக்கு 2000 காய்கள் உடைக்கும் திறன் உள்ளதாக உள்ளது. தேங்காயிலிருந்து கிடைக்கும் தண்ணீர் வெளியேற்ற குழாய் அமைப்பு உள்ளது. உட்செலுத்தும் கலனில் தேவையான அளவு தேங்காய் போடும் அளவுஅமைப்பு உள்ளது. இதன் உத்தேச விலை ரூ.5,00,000/- ஆகும்.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

