sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பெரியார் பாசனத்தில் நெல் சாகுபடி

/

பெரியார் பாசனத்தில் நெல் சாகுபடி

பெரியார் பாசனத்தில் நெல் சாகுபடி

பெரியார் பாசனத்தில் நெல் சாகுபடி


PUBLISHED ON : ஆக 07, 2013

Google News

PUBLISHED ON : ஆக 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியார் பாசனத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாயப் பணிகளைத் துவங்கி உள்ளனர். நிலத்தை உழுவது, சமப்படுத்துவது மற்றும் பெண்கள் வரிசை நடவில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பது, காகங்கள் சேற்றில் உள்ள பூச்சிகளை பிடித்துத் திண்ணும் காட்சிகளை காணலாம். இது சமயம் விவசாயிகள் சாகுபடியில் அதிக மகசூலினையம், கணிசமான லாபத்தையம் எடுக்க இக்கட்டுரையில் கட்டுக்கோப்பு சாகுபடி முறைகளை விவசாயிகளுக்கு விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவனமாக சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கரில் 66 கிலோ கொண்ட மூடை 34 வரை கிடைக்கும்.

விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் கொடுக்கும் அசோலா உரத்தை இடலாம். நடைமுறையில் இது விவசாயிகளுக்கு நல்ல மகசூலினை கொடுத்துள்ளது. இங்கு விவசாய இலாகா அதிகாரிகளும் உதவுகின்றனர். இவர்கள் நெல்லுக்கு உயிர் உரங்களாகிய அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை இட ஊக்கம் காட்டுகிறார்கள். விவசாயிகள் இலாகா அதிகாரிகள் சொல்லியபடி கணிசமான மகசூல் கிடைக்கும். பல விவசாயிகள் கவனம் காட்டுவதில்லை. இது தவறு. விவசாயிகள் அவர்களது உதவியை நாடவேண்டும். இவர்கள் சிபாரிசுகளை நன்றியோடு கடைபிடித்தவர்கள் நல்ல லாபம் பெற்றுள்ளனர். விவசாய இலாகா உதவி பெற்றவர்கள் நிலங்களில் பூச்சி, வியாதிகள் பாதிக்கவில்லை. விவசாய இலாகா விவசாயிகளுக்கு வரிசை நடவு போட்டு நெல் வயலில் கோனாவீடர் கருவியை பயன்படுத்தினர். இதனால் களைச்செடிகளை நிலத்தில் மடக்கி உழுது அதை பசுந்தாள் உரமாக மாற்றிவிட்டனர். இம்மாதிரியான நிலங்களில் சில இடங்களில் களைச்செடிகள் காணவில்லை. விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த குளத்து வண்டல், ரசாயன உரங்கள் போன்றவைகளை போட்டும் மிகப்பெரிய மகசூல் ஒன்றும் காணவில்லை. பெரியார் பாசனப் பகுதிகளில் உள்ள விவசாய இலாகா அதிகாரிகள், வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு எப்போதும் உதவ காத்திருக்கின்றனர்.

அதிகாரிகளது உதவியைக் கொண்டு விவசாயம் செய்தவர்கள் கடுவிரைவில் பயன் அடைந்ததோடு, அவர்கள் இரண்டாம் பயிர் ஆடுதுறை 39 நெல்லுக்கு நாற்றுவிட்டனர். விவசாயிகள் மேற்கண்ட சிபாரிசினைக் கடைபிடித்தால் நிச்சயமாக முதல்போக சாகுபடியில் நல்ல பலன் அடைய முடியும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us