sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மதுரையில் தொடர்ந்து கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி

/

மதுரையில் தொடர்ந்து கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி

மதுரையில் தொடர்ந்து கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி

மதுரையில் தொடர்ந்து கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி


PUBLISHED ON : மார் 06, 2013

Google News

PUBLISHED ON : மார் 06, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் பல இடங்களில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் சந்தோஷமாக நெல் சாகுபடி செய்துவருகிறார்கள். மதுரையில் வண்டியூர் கிராமத்தில் முற்போக்கு விவசாயி எம்.ஏ.விஜய நடராஜனின் சாகுபடி நிலத்திற்கு அருகில் கண்மாய் இருப்பதால் அவரது கிணற்றில் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கிறது. அதனால் அவர் உற்சாக மாகவும் சந்தோஷமாகவும் நெல் சாகுபடிசெய்துவருகிறார். அவர் ஏடீடி45, ஜே-13 நெல்லினை 15 நாட்களுக்கு முன் அறுவடை செய்துள்ளார். ஏடீடி45 ஒரு ஏக்கரில் 36 மூடை மகசூலும் ஜே13 ஒரு ஏக்கரில் 34 மூடை மகசூலும் எடுத்துள்ளார். ஒரு ஏக்கரில் ஏடீடி 45ல் ரூ.5000, ஒரு ஏக்கர் ஜே13ல் ரூ.5000 லாபம் கிடைத்துள்ளது. ரூ.500 விற்ற வைக்கோலில் இப்போது பத்து மடங்கு அதிகமாக லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வேளாண்மை இலாகா அதிகாரிகள் விஜய நடராஜனை சந்தித்து நேர்காணல் எடுத்துச் சென்றுள்ளனர். விவசாயி அதிகாரிகளிடம் தான் கை நடவின் மூலம் செய்வதாகவும், இயந்திர நடவை பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். நெல் பயிரில் பூச்சித்தொல்லை இல்லை என்றும் கூறினார். அவர்கள் விவசாயியை அடுத்தமுறை ஒற்றை நாற்றுமுறை நடவினை கடைபிடிக்கச் சொல்லி உள்ளனர். ஒற்றை நாற்று நடவில் தூர்கள் அதிகம் கிடைக்கும். சாகுபடி செலவு குறைவு. மகசூல் அதிகம். நீர்ப்பாசனத் தேவை குறைவு. குறைவான வேலை ஆட்கள் போதும்.

விவசாயி ரசாயன உரமே உபயோகிக்கவில்லை. பத்து வண்டி மாட்டுச்சாணம் தனது நிலத்திற்கு உபயோகித்துள் ளார். தற்போது கால்நடைத் தீவனம் சரியாக கிடைக்காததால் பசுக்களை ஈரோடு மாட்டுச் சந்தையில் விற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த அவல நிலைமையை விவசாயிகள் போக்க வேண்டும்.

கிணற்றுப் பாசனத்தில் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் ஜே13 விதை நெல்லை தேர்ந்தெடுத்து தொடர்ந்து சாகுபடி செய்யலாம். ஜே13 விதைநெல் கருப்பாயூரணியைச் சேர்ந்த தர்மராஜனிடம் கிடைக்கும். 93624 44440.

தமிழ்நாடு விவசாய இலாகா அதிகாரிகள் விஜய நடராஜனை சந்தித்து நேர்காணல் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாரிகள் விவசாயியை அடுத்தமுறை ஒற்றை நாற்று முறை நடவினை கடைபிடிக்கச் சொல்லி உள்ளார்கள். அதிக மகசூல் கிட்டும். நீர்ப்பாசனத்தேவை குறைவு. குறைவான வேலை ஆட்கள் போதும். பூச்சி தொல்லை இல்லை. விஜய நடராஜன் நல்ல மகசூல் எடுத்து லாபம் எடுத்திருந்த போதிலும் விவசாய இலாகா சிபாரிசு ஏற்றபடி செய்திருந்தால் அதிக லாபம் எடுத்திருக்கலாம். விவசாயிகள் தங்கள் வசம் இருந்த வைக்கோலை பயன்படுத்தாதால் மாடுகளை சந்தையில் விற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தெரிந்து கொள்வது யாதெனில் சாகுபடியை, பல விஷயங் களை கருத்தில் கொண்டு திட்டமிட்டு செய்ய வேண்டும். விவசாயிகள் தயவுசெய்து விவசாய இலாகா சிபாரிசுக்கு ஏற்று செய்ய வேண்டும். திட்டமிடுவது யாதெனில் கடுமையான உழைப்பு, விஞ்ஞான தொழில் நுட்பங்களை அனுசரிப்பது, செயல் ஆற்றல் திறன் இவைகளோடு விவசாய இலாகா கூறும் வழிமுறைகளையும் கையாள வேண்டும். இவ்வாறு செய்யாமல் வைக்கோலை வைத்திருந்தும் மாடுகளை சந்தையில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us