sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு

/

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு

பாரம்பரியமிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு


PUBLISHED ON : பிப் 27, 2013

Google News

PUBLISHED ON : பிப் 27, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரம்பரிய நாட்டுக் கோழியை மகளிர் குழுக்கள், வளரும் குழந்தைகள், வயோதி கர்கள்,பென்ஷன்தாரர்கள், வீட்டில் உள்ள பெண்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், கடுமையான வேலைப்பளு உள்ளவர்கள், விவசாயிகள், தோப்புகள், தோட்டம், மேய்ச்சல் நிலம் உள்ளவர்கள், காலி இடம் உள்ளவர்கள் என யாவரும் வளர்க்கலாம்.

நாட்டுக்கோழி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை: கழிச்சல் இல்லாமல், எச்சம் இடும் பகுதி வெள்ளையாக மிச்சம் ஒட்டி இருக்கக்கூடாது. ரோமம் கட்டி ஒட்டி இருக்கக்கூடாது. கோழியின் கால்கள் இளம் மஞ்சள் நிறத்துடன் கொண்டை சிவந்த நிறத்துடன், மூக்கு இளம் மஞ்சள் நிறத்துடன், பிடிக்கும்பொழுது திமிறிக் கொண்டு பலத்த சப்தம் இடவேண்டும். தொடைப்பகுதி நல்ல இறுக்கத்துடன் இருக்க வேண்டும். கொண்டை கருமை நிறத்துடன் இருக்கக்கூடாது. நல்ல சுறுசுறுப்புடன் ஓடியாடி மண்ணில் புரண்டு விளையாட வேண்டும்.

இப்படிப்பட்ட குணநலன்கள் கொண்ட நாட்டுக் கோழியாக பார்த்து வாங்க வேண்டும். முட்டை இடுகின்ற கோழிகள், அடைபடுத்த கோழிகள், முட்டை இட்டு கழிக்கின்ற கோழிகளை வாங்கக்கூடாது. வளர்ப்பதற்கு 3, 4 மாத வயது கோழிகளை வாங்க வேண்டும். உங்கள் இடத்தில் பழகி பெட்டையும் சேவலும் இனச்சேர்க்கை சேர்த்து முட்டையிட்டு அடைவைத்து குஞ்சு பொரிக்க வேண்டும்.

6 பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் திறந்த வெளியில் வெயிலில் மேய விட்டு வளர்க்கலாம். விற்பனைக்கு சந்தைகள், கறிக் கடைகள், திருவிழா காலங்கள், பண்டிகைகள் என ஏராளமான வழிவகைகள் விற்பனை வாய்ப்புள்ளது. சிறிய முதலீட்டில் பாரம்பரிய நாட்டுக் கோழியை வளர்க்கலாம்.

6 பெட்டை கோழிகள் 7, 8 மாத வயதில் முட்டை இட ஆரம்பிக்கும். ஒரு கோழி 10லிருந்து 13 முட்டைகள் வரை இடும். வருடத்தில் 6 முறை மட்டும் முட்டை இடுவதாக வைத்துக்கொண்டாலும் வருடத்தில் தோராயமாக 60-75 முட்டைகள் கிடைக்கும். ஒரு கோழிக்கு 9 முட்டை அடை வைத்து ஏழு குஞ்சுகள் பொறித்தாலும் இன்றைய நிலவரப்படி ஒரு கோழிக்குஞ்சின் விலை ரூ.40/- (ஒரு நாள் வயது கோழிக்குஞ்சு). (தகவல்: கே.வி.நடராஜன், 98949 15222)

-கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை.






      Dinamalar
      Follow us