/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பருத்தியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்
/
பருத்தியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்
பருத்தியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்
பருத்தியில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்
PUBLISHED ON : மார் 28, 2018

பருத்தி சாகுபடியாளர்கள் தங்களின் வயலில் பருத்தி பயிரில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
பயிரின் இளம் பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால், பருத்தி பயிரில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இலைப்பேன் தாக்குதலால் பருத்தி இலைகளின் கீழ்ப்புறம் வெள்ளை நிறமாக மினுமினுப்புடன் காணப்படும். இளஞ் செடிகள் வளர்ச்சி குன்றும்.
பயிரில் கீழுள்ள இலைகளை திருப்பிப் பார்த்து உற்று நோக்குங்கள். இலை நரம்புகளுக்கு இடையில் சிறிய மெலிந்த பழுப்பு நிறமான இலைப்பேன் மற்றும் மஞ்சள் நிறமான இலைப்பேன் குஞ்சுகளை காணலாம்.
இலைகளை ஒரு வெண்ணிற அட்டையின் மீது தட்டினால் சிறிய மெலிந்த இலைப்பேன்கள் நகர்வதை எளிதில் கண்டு கொள்ளலாம்.
பருத்தி பயிரில் இலைப்பேன் தாக்குதல் தீவிரமடைந்து காணப்பட்டால் 'டைமீதோயேட்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதமும், 'பிப்ரோனில்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி வீதிமும் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் இலைகளின் கீழ்ப்புறமும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும், விசைத் தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 60 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும்.
மருந்து கரைசல் பயிரில் நன்று படிவதற்காக சாண்டோவிட், இண்ட்ரான், பைட்டோவிட், அக்ரோவிட் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.
- முனைவர் ம.குணசேகரன்
பேராசிரியர் மற்றும் தலைவர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

