/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேளாண் பயிற்சி முகாம்கள் உணவு, தங்குமிடம் இலவசம்
/
வேளாண் பயிற்சி முகாம்கள் உணவு, தங்குமிடம் இலவசம்
PUBLISHED ON : மார் 28, 2018

துாத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் வேளாண்மைப் பண்ணையில் விவசாயி தொழில் முனைவோருக்கு மூன்று நாட்களுக்கான வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஒரு முகாமில் 30 பேர் வீதம் 30 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் 6, ஏப்ரல் 25 முதல் 27.
மே 8 முதல் 10 மற்றும் மே 23 - 25 மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயிற்சி ஏப்ரல் 10 முதல் 12 வரை நடக்கிறது. இப்பயிற்சி முகாமில் பசுமைக்குடில், கால்நடை பராமரிப்பு, வருமானம் தரும் காய்கறிகள்,
உழவர் கூட்டமைப்பு, சொட்டு நீர், உரமிடுதல், துல்லிய பண்ணையம், மண் வளம், நபார்டு வங்கித் திட்டங்கள், காய்கறி பயிரிடுதல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை குறித்து அனுபவமுள்ள பேராசிரியர்களால் பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியின் போது ஒரு நாள் பண்ணை சுற்றுலா அழைத்து செல்வர். 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் கலந்து கொள்ளலாம். உணவு, தங்கும் இடம், போக்குவரத்து செலவு இலவசம்.
ஏற்கனவே இப்பண்ணையில் பயிற்சி பெற்றவர் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.
83000 26073 மற்றும் 96778 07513 ஆகிய அலைபேசி எண்களில் முன்பதிவு செய்வோர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள இயலும். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களும் கலந்து கொள்ளலாம். குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. விவசாய தொழில் வாய்ப்புகள், விற்பனை முறைகள், வங்கிக்கடன் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.
- எம்.ஞானசேகர்
தொழில் ஆலோசகர், சென்னை.

