/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செம்புள்ளி நோய் கட்டுப்படுத்தினால் தரமான நெல் மகசூல் பெறலாம்
/
செம்புள்ளி நோய் கட்டுப்படுத்தினால் தரமான நெல் மகசூல் பெறலாம்
செம்புள்ளி நோய் கட்டுப்படுத்தினால் தரமான நெல் மகசூல் பெறலாம்
செம்புள்ளி நோய் கட்டுப்படுத்தினால் தரமான நெல் மகசூல் பெறலாம்
PUBLISHED ON : டிச 11, 2024

நெல்லில் செம்புள்ளி நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள் ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
பருவ மழைக்கு பின், பைபோலாரிஸ் ஒரைசே என்னும் பூஞ்சாணத்தால், செம்புள்ளி நோய் வரும். இந்த நோய் காற்றின் வாயி லாக வேகமாக பரவி, இலை, நெல் மணிகளை நேரடியாக தாக்கும். நெற்பயிரின் இலை களின் மீது, பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, இலை, நெல் மணிகளில், முழுதுமாக பரவும். இதனால், நெல் மணி களின் முளைப்பு திறன், நாற்று வளர்ச்சி பாதித்து, மகசூல் இழப்பு ஏற்படும்.
இதை தவிர்க்க, கோவை55 ரகம், டி.கே. எம்13 உள்ளிட்ட தமிழ் நாடு வேளாண்மை பல் கலை கழக ரகங்களை பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் அல்லது பேஸில்லஸ்சப் டெலிஸ் போன்ற உயிர் உரங்கள் ஒரு கிலோ விற்கு, 10 கிராம் வீதத்தில் விதை நேர்த்தி செய்து, விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய தவறும் பட்சத்தில், மேலே குறிப்பிட்ட அளவில் நாற்று முடிச்சுகளை உயிர் உரத்தில் ஊரவைத்து நடவு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு, டெபு கோனோசோல், 80 மில்லி டிரைபிளாக்சிஸ்ட்ரோபின் மற்றும், 80 கிராம் டிரை சைக்ளோசோல், அசாக் சிஸ்ட்ரோபின் என்ற அள வில் தெளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். அவர்
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர், திரூர் நெல் ஆராய்ச்சி மையம்,
திருவள்ளூர்.
97910 15355