PUBLISHED ON : டிச 26, 2018

குளிர்கால இறவை (ஆகஸ்ட் - செப்டம்பர்), கோடைகால இறவை (பிப்ரவரி - மார்ச்), மானாவாரி (செப்டம்பர் - அக்டோபர்) என காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
ரகங்களில் வீரிய ஒட்டு ரகங்கள் ராசி, மல்லிகா, ஜாது, ஜாக்பாட், புரோவலிக்கா போன்றவற்றை பயன்படுத்தவும்.
விதையளவு: ஏக்கருக்கு 500 கிராம். இடைவெளி: மானாவாரி - 60க்கு 15 சென்டி மீட்டர். இரவை - 90க்கு 45 செ.மீ., அல்லது 120க்கு 60 செ.மீ., விதைத்தல்: விதைகளை 3 செ.மீ., ஆழத்தில் பார்களில் பக்கவாட்டில் ஊன்ற வேண்டும்.
களை நிர்வாகம்: 'பென்டிமெத்திலின்' என்ற களைக்கொல்லியை விதைத்த மூன்றாம் நாள் ஏக்கருக்கு 1.3 லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
அதாவது 5 மி.லி., பென்டிமெத்தலின் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். களைகள் அதிகமாக முளைத்து இருப்பின் 'எயிஸ்லோபாப்பை' (டர்கா சூப்பர்) 5 சதவீதம், என களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி., பயன்படுத்தவும். இதனுடன் 45ம் நாள் களைகளை எடுக்க வேண்டும்.
இடைவெளி நிரப்புதல்: விதைத்த 10 - 12 ம் நாட்களில் முளைப்பு இல்லாத இடங்களில் விதையிட வேண்டும்.
பயிர் களைதல்: 15ம் நாள் அதிகப்படியான செடிகள் இருந்தால் களைய வேண்டும்.
உர நிர்வாக மேலாண்மை: மானாவாரி - யூரியா (கிலோ/ஏக்கர்) 56, டி.ஏ.பி. 35, பொட்டாஷ் 27. இறவை - யூரியா (கிலோ /ஏக்கர்) 84, டி.ஏ.பி. 52, பொட்டாஷ் 40 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். மானாவாரி சாகுபடியில் 28 கிலோ யூரிய, 14 கிலோ பொட்டாஷ் மற்றும் 35 கிலோ டி.ஏ.பி.,ஐ அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள யூரியா மற்றும் பொட்டாஷ் இரண்டாவது களை எடுத்த பின்பு இட வேண்டும். இறவை பயிரில் 28 கிலோ யூரியா, 14 கிலோ பொட்டாஷ் மற்றும் 52 கிலோவை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள உரங்களை 45ம் நாள் மற்றும் 65ம் நாள் முறையே 25 கிலோ யூரியா மற்றும் 14 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.
நுண்ணுாட்ட உரக்கலவையை ரகங்களுக்கு 5 கிலோ /ஏக்கர் என்ற அளவிலும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ/ஏக்கர் என்ற அளவிலும் எடுத்து 50 முதல் 60 கிலோ தொழு உரத்துடன் சேர்த்து வைத்து ஒரு மாதம் கழித்து இட வேண்டும். 'சிங்க் சல்பேட்' உரத்தை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
இலை வழி தெளிப்பான்: 2 சதவீதம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் ஒரு சதவீதம் யூரியாவை காய் பிடிக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இலைகள் சிவப்பாக மாறும் போது 0.5 சதவீதம் மெக்னிசியம் சல்பேட் மற்றும் ஒரு யூரியா மற்றும் 0.10 சதவீதம் சிங்க் சல்பேட் கலந்து இலை வழியாக 50 வது மற்றும் 80 வது நாள் தெளிக்கவும். 40 பி.பி.எம், என்.ஏ.ஏ.,ஐ. 60 மற்றும் 70 வது நாள் தெளிக்கவும். அதாவது 10 லிட்டர் நீரில் 4 மில்லி பிளனோடாக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலை பருத்தி பிளஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 3 கிலோ/ஏக்கர் என்ற முறையில் பூ பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் தெளிக்க வேண்டும்.
நோய் மேலாண்மை: வேர் அழுகல் நோய் - காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம்/லிட்டர் தண்ணீரில் கல்நது வேர் பகுதியில் நனையும்படி ஊற்ற வேண்டும். இலைப்புள்ளி நோய் - மான்சோசெப் 63 சதவீதம் டபள்யு.பி., மற்றும் கார்பென்டாசிம் 12 சதவீதம் டபள்யு.பி., இணைந்த கலவையை ஏக்கருக்கு 300 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். டிரைகோபோஸ் 40 சதவீதம் இ.சி., - 750 மி.லி., /ஏக்கர் என்ற அளவிலும், சைப்பர் மெத்திலன் 25 சதவீதம் இ.சி., - 120 மி.லி., /ஏக்கர் என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். வெள்ளை ஈ - தையாமீத்தாக்சாம் 25 டபள்யு.ஜி., - 750 கிராம்/ஏக்கர் என்ற அளவிலும், அசிட்டம் பிரைடு 20 சதவீதம் எஸ்.பி., - 100 கிராம்/ஏக்கர் என்ற அளவி லும் பயன்படுத்த வேண்டும்.
- முனைவர் ம.சரவணன்
உழவியல் தொழில்நுட்ப வல்லுனர், காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம்

