/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கணிசமான மகசூலுக்கு குந்தன் ரக கிர்ணி பழ சாகுபடி
/
கணிசமான மகசூலுக்கு குந்தன் ரக கிர்ணி பழ சாகுபடி
PUBLISHED ON : மார் 26, 2025

குந்தன் ரக கிர்ணி பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மு.வெங்கடேசன் கூறியதாவது:
தாய்லாந்து நாட்டின் குந்தன் ரக கிர்ணி பழம் என் விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூடைய மணல் கலந்த களிமண்ணுக்கு நன்றாக வளர்கிறது. இந்த விதையை நடவு செய்து, 70வது நாளில் அறுவடைக்கு வரும். ஒரு ஏக்கருக்கு 15 டன் வரையில் மகசூல் பெறலாம்.
குறிப்பாக,வடகிழக்கு பருவ மழை முடிந்து டிசம்பர் மாதம் இறுதியில், விதை விதைக்க வேண்டும். அப்போது தான் மார்ச் மாதம் துவக்கத்தில் அறுவடைக்கு வரும். கோடை சீசன் துவங்கும் முன்னரே நல்ல விலைக்கு பழங்களை விற்பனை செய்து விடலாம்.
ஏப்ரல் மாதம் அறுவடை செய்யும் போது நல்ல மகசூல் கிடைத்தாலும், குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்ய வேண்டி இருக்கும்.
எனவே, மழைக்கால சூழலை கவனத்தில் கொண்டு, கிர்ணி பழம் சாகுபடி செய்தால், அசத்தலான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: மு. வெங்கடேசன்,
94452 37186.