/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மிளகாய் இலை சுருட்டை கட்டுப்படுத்த கரைசல்
/
மிளகாய் இலை சுருட்டை கட்டுப்படுத்த கரைசல்
PUBLISHED ON : மார் 26, 2025

மிளகாய் இலை சுருட்டு நோயை கட்டுப் படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியை முனைவர் சுதாஷா கூறியதாவது:
மிளகாயில் இலை சுருட்டு நோய் வெள்ளை ஈக்களால் பரவும் நச்சுயிரிநோயாகும். இது, கோடை காலங்களில் அதிகமாக காணப்படும்.
நோய் எதிர்ப்பு திறனு டைய மிளகாய் ரகங்களை தேர்வு செய்து, நடவு செய்யலாம். நோய் தாக்கியசெடிகளை அகற்ற வேண்டும். மேலும், நோய் பரப்பும் வெள்ளை ஈக்களைபூச்சிக் கொல்லிகள் மற்றும் விளக்கு பொறிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
மீத்தைல் டெமட்டான்ஒரு ஏக்கருக்கு 400 மில்லி, பிப்ரோனில் ஐந்து சதவீதம் 400 மில்லி, இமிடா குளோபிரிட் 70 சதவீதம் ஒரு ஏக்கருக்கு 12 கிலோ ஆகிய பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்று தெளிக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் சுதாஷா,
97901 15355.