sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோடையில் பலன் தரும் எள் சாகுபடி

/

கோடையில் பலன் தரும் எள் சாகுபடி

கோடையில் பலன் தரும் எள் சாகுபடி

கோடையில் பலன் தரும் எள் சாகுபடி


PUBLISHED ON : மே 07, 2014

Google News

PUBLISHED ON : மே 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் அடுமனை (பேக்கரி) பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும். மதுரையைச் சேர்ந்த எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகள் விவசாயிகளின் தந்தை என்று சொல்வார்கள். தர்மராஜன் பசுமைக்குடில்களில் என்ன பயிர் சாகுபடி செய்வது என்பது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார். எதிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது.

விவசாயிகள் ஒரு கிலோ எள் விதையை சாமர்த்தியமாக விதைக்கலாம். நிலத்திற்கு கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழுவுரம், யூரியா 31 கிலோ, சூப்பர் 56 கிலோ இட வேண்டும். சாகுபடி நிலம் ரவை உப்புமா பதத்தில் இருக்கும்போது எள் விதைக்க வேண்டும். ஆனால் ஏர் மாடுகளின் குளம்புகளில் அல்லது கலப்பையில் மண் ஒட்டக் கூடாது. எள் விதையினை விதைத்த பிறகு நிலத்தில் முள் செடி அல்லது படல் கொண்டு இழுத்து விதையை பூமியில் அழுத்தும்படி செய்து மேல் மண் மூடும்படி செய்ய வேண்டும். நிலத்தை கடைசி உழவு செய்யும்போது மக்கிய தொழு உரம் 5 டன் அளவு இடுவது அவசியம்.

இறவை பயிருக்கு அடியுரமாக யூரியா 30 கிலோ மேலுரமாக விதைத்த 20-25 நாளில் 8 கிலோ யூரியாவும் 30 -35 நாளில் 7 கிலோ யூரியாவும் இட வேண்டும். ஏக்கருக்கு 15 கிலோ மாங்கனீஸ் சல்பேட் இட வேண்டும். எள் செடியில் ''எக்கடையான்'' சாற்றினை உறிஞ்சி விடுகின்றது. ஒருவித வைரஸ் நோய் வரும். உடனே அதை விஞ்ஞானிகளின் சிபாரிசினை கேட்டு ஆவண செய்ய வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு சமப்படுத்தி விட வேண்டும். விதையின் மூலம் பரவும் வாடல், இலைப்புள்ளி நோய்களைத் தடுக்க இரண்டு கிலோ விதையுடன் 4 கிராம் மருந்தை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இது மாதிரியான செயல்களை பூஞ்சாள வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

அறுவடை : செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள காயில் உள்ள விதைகள் கருப்பாக வந்தால் உடனே அறுவடை செய்ய வேண்டும். இது சமயம் காய்கள் வெடிக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இதைத் தடுக்க செடிகளை அறுவடை செய்து அம்பாரம் போட வேண்டும். செடிகளை தலைகீழாக மூன்று நாட்களுக்கு அம்பாரத்தில் வைக்க வேண்டும். பிறகு அம்பாரத்தை பிரித்து செடிகளை உலர்த்தி காய்களை வெடிக்க விட வேண்டும். செடிகளைத் தட்டி எள்ளினை எடுக்கலாம்.

மகசூல் : ஏக்கரில் 350 கிலோவிற்கு குறைவில்லாமல் மகசூல் பெறலாம். இந்த மகசூலினை 90 நாட்களில் பெறலாம். இந்த விவரங்களை தர்மராஜன் மனப்பாடமாக எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விவரமாக சொல்லி வருகிறார்.

பாசனம் : எள்ளுக்கு அதிக நீர் தேவையில்லை. அஞ்சிலே ஒரு தண்ணீர், பிஞ்சிலே ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

எள் விவசாயிகள் 90 நாட்களில் கணிசமான அளவு லாபம் எடுக்கின்றனர். கோடையில் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண், பெண் விவசாயிகள் எள் சாகுபடி செய்வதையே விரும்புகின்றனர். விவசாயிகள் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கக்கூடிய சிறந்த எள் ரகங்களை வாங்கி சாகுபடி செய்து பயன் அடையலாம்.

- எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us