PUBLISHED ON : ஜூன் 03, 2026
அ நிறம் | அளவு
சிறிய அளவிலான பால் பண்ணை உருவாக்குதல் குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ப.முத்துசாமி கூறியதாவது:
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 12ம் தேதி இரு கறவை மாடுகளில் இருந்து, 10 கறவை மாடுகள் வரையில், சிறிய அளவிலான பால் பண்ணை உருவாக்குதல் குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு, கட்டணமாக 500 ரூபாய், சேவை கட்டணமாக 90 ரூபாய் என, மொத்தம், 590 ரூபாய் செலுத்த வேண்டும். வரும், 11ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்யும், 30 பேருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ப.முத்துசாமி,
97905 38025.
