sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்...

/

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்...

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்...

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்...


PUBLISHED ON : ஆக 20, 2014

Google News

PUBLISHED ON : ஆக 20, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன.

அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது.

காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி நிற்கின்றன. ஆறு ஏக்கரிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாதித்துள்ளார் விவசாயி மகாராஜன். தொட்டவுடனே சாதிக்கவில்லை. தோல்வி தந்த பாடம் தான், சாதிக்கத் தூண்டியது என்கிறார்.

ஏற்கனவே ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரி திருமுருகு, ' 5 எக்டேர் வரை அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கச் சொல்லும் போதெல்லாம்', 'இதெற்கு... காசை கரியாக்கவா' என்று விட்டுவிட்டேன். தண்ணீரின்றி தென்னை கருகிப் போனது. ஆறுஏக்கர் மாந்தோப்பிற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் தண்ணீர் ஊற்றிய மரத்திற்கு, மீண்டும் தண்ணீர் கிடைக்க ஒருவாரமானது.

மீண்டும் சொட்டுநீர் பாசனம் பற்றி கூறியதும், முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று சம்மதம் சொன்னேன். ஆறு ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, அரசே மானியம் தந்தது. கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து சொட்டுநீர் கருவிகளை அமைத்தேன். மின்மோட்டார் மூலம் உரம் தண்ணீரில் கலக்க தனி ஏற்பாடு செய்தேன். தற்போது ஆறு ஏக்கருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்து விடுகிறது. மின்செலவு குறைந்துள்ளது. களைகள் குறைந்து விட்டன. கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரில் மரங்கள் நன்றாக காய்த்து, மகசூலும் கிடைத்தது. மா மட்டுமல்ல... ஓராண்டுக்கு முன் கொய்யாவில் லக்னோ 49 ரகத்தில் 300 மரங்கள் வைத்து, பராமரித்து வருகிறேன். மாட்டு எரு, உரம் தருகிறேன்.

வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, மரத்திற்கு ஒரு டன் காய்கள் தான் கிடைத்தன. இப்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், இரண்டு டன் காய்கள் கிடைக்கின்றன. மழை பெய்தால் இன்னும் மகசூல் கிடைக்கும்.சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், ஆறு ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற முடிந்தது, என்றார்.

இவரிடம் பேச: 97867 51903.

எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை






      Dinamalar
      Follow us