
வேளாண்மையில் நீர் நிர்வாகம் முறையாக செய்திட சொட்டு நீர்ப்பாசன முறை உதவும் என்பதை கண் கூடாக கண்டு அவற்றை பொருத்தியுள்ள பலர் தனது நிலத்துக்கு களை பெருக்கத்தை வராது தடுத்து ஒருங்கிணைந்த உர நிர்வாகம் கடைப்பிடித்திட தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பாசன நீர் உப்புத்தன்மை காரணமாக உப்பு படிவதை கண்டும் காணாது பலர் உள்ளனர். இது நாளடைவில் பைப்புகளை கடினப் படுத்தி நீர் செல்லும் பாதையை குறுக்கி விடும். இதனால் பயிர்களுக்கு நீர் பாய்ச்சல் தடை படும். பைப்புகளில் உப்பு படிவத்தை நீக்கும் அற்புத சிகிச்சை முறைதான் அமிலம். இதை பயன்படுத்தி கறைகளாகப் படியும் உப்பை (கால்சியம் கார்பனேட் எனும் பவுடர் போன்றவை) கரைத்து வெளி வர செய்திடும் உயர் உற்பத்தி உத்தியாகும். மண் மற்றும் நீரின் உப்பு அளவை பி.எச். என்று கார அமில நிலைப்புள்ளி என்ற அலகில் குறிப்பார்கள். உப்பு அற்ற சமநிலை 7 எண்ணும், அதற்கு கீழே சென்றால் அமிலம் எனவும் அதற்கு மேலே சென்றால் உப்பு உள்ள கார நிலை என்றும் குறீயீடு உள்ளது.
பொதுவாக உப்பு, மண்ணில் அல்லது தண்ணீரில் இருக்கலாம். சில சமயம் அதிக ஆழத்தில் நீர் எடுப்பதால் உப்பு மேலே வரலாம். தக்க கவசங்கள், கையுறைகளை பயன்படுத்தி நீரில் மட்டுமே அகிலம் கலக்கப்பட்டு குழாயில் படியும் வெள்ளை நிற மாவு போன்ற பொருள் கால்சியம் கார்பனேட் எனப்படும் உப்பை வெளியேற்றலாம். பொதுவாக உதவும் என்றாலும் கந்தக அமிலம் அதிக நச்சு தன்மை வாய்ந்ததால் பயன்படுத்துவது கிடையாது. மண்ணில் கார அமில நிலை ஆய்வுக்கு பி.எச். பேப்பர் உதவும், கால்சியத்தின் அளவு 50 மில்லி கிராம் ஒரு லிட்டர் நீரில் அதிகமாக இருப்பின் பாஸ்பரிக் அமிலம் உதவாது. தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி.

