sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்

/

சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்

சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்

சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்


PUBLISHED ON : நவ 14, 2018

Google News

PUBLISHED ON : நவ 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாவாரி மற்றும் உவர் மண் பகுதிகளில் மரப்பயிர்கள் சாகுபடி மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும். மொட்டு கட்டப்பட்ட சீமை இலந்தை நட்டு ஒரு மரத்துக்கு ஆண்டு தோறும் 80 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். குறிப்பாக பனாரசி, உம்ரான் கோலா மற்றும் கைத்தளி ரகங்கள் ஏற்றவை. இருமண்பாட்டு தன்மை உடைய செம்மண் நிலம் மிகவும் உகந்தவை.

இயற்கை உரம்

செடிக்கு செடி 8 மீட்டர் வரிசைக்கு வரிசை 8 மீட்டர் இடைவெளியில் நட்டு வாய்ப்பிருந்தால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சலாம். மானாவாரி பகுதிகளில் சாய்வு பாத்திகளை பெரியதாக அமைக்க வேண்டும். பருவமழை வரும் முன் குழிகள் 1 மீட்டர் அளவு எடுத்து ஆறப் போட்டு நடவும். ஓராண்டு கழித்து தொழு உரம் 20 கிலோ அல்லது மண்புழு உரம் 10 கிலோ போதும்.

ஒரு குழிக்கு தழைச்சத்து 200 கிராம், மணி சத்து 100 கிராம் மற்றும் சாம்பல் சத்து 200 கிராம் தேவை. அதாவது யூரியா 440 கிராம், சூப்பர் 625 கிராம், பொட்டாஷ் 330 கிராம் தேவை. மேலும் இரண்டு ஆண்டுக்கு பின் மாதத்துக்கு 30 கிலோ தொழுஉரம், யூரியா வடிவில் (தழைச்சத்து) 1.100 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1.250 கிலோ, பொட்டாஷ் உரம் 830 கிராம் தேவை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கவாத்து செய்து அதாவது நான்கு திசைகளிலும் பக்கக் கிளைகள் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் தோன்றும்படி பார்த்து கொள்ள வேண்டும். நேராக வளர்வதற்கு பக்க துணையாக குச்சிகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

கவர்ச்சி பொறி

ஒரு ஆண்டு வளர்ச்சியான மரங்களின் நுனியை வெட்டி விட வேண்டும். பின் ஆறு அல்லது 8 முதன்மை கிளைகள் தோன்றிட 15 முதல் 30 செ.மீ., இடைவெளியில் தோன்ற அனுமதிக்க வேண்டும்.

பின் முதன்மை கிளைகளின் வளர்ச்சியை தேக்கி இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும். 'பழ ஈக்கு' இனக் கவர்ச்சி பொறி வைத்து லேக் பூச்சி தாக்கப்பட்ட கிளை அகற்றியும், பயிர் பாதுகாப்பு செய்து இலைக்காம்பு புள்ளிக்கு கார்பன்டாசிம் ஒரு கிராம், ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

சாம்பல் நோய் தடுக்க நனையும் கந்தகம் இரண்டு கிராம் மருந்து ஒரு லிட்டர் நீர் என்ற அளவு தெளிக்க வேண்டும். தொடர்புக்கு 98420 07125.

-டாக்டர் பா.இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர், தேனி







      Dinamalar
      Follow us