sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முட்டை பொரிக்கும் கருவி

/

முட்டை பொரிக்கும் கருவி

முட்டை பொரிக்கும் கருவி

முட்டை பொரிக்கும் கருவி


PUBLISHED ON : பிப் 22, 2012

Google News

PUBLISHED ON : பிப் 22, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடைகாத்தல்: வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சுபொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப்பானின் உள்வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 - 100.5 டிகிரி பாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.

கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். நவீன அடைகாப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கரு வளர்நிலை காண வேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்க பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில்தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்துவிட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்துகொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். கோழியின் வம்சாவளியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்க வேண்டும்.

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து, ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்ய வேண்டும். நன்கு கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இது நோய் பரவலின் தன்மையைக் குறைக்கும். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.

-ஆர்.ஜி.ரீஹானா,
தாராபுரம், 89037 57427.






      Dinamalar
      Follow us