/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
புரத சத்து நிறைந்த நீள ரக முட்டை பழம்
/
புரத சத்து நிறைந்த நீள ரக முட்டை பழம்
PUBLISHED ON : மார் 05, 2025

நீள ரக முட்டை பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண்நிலத்தில், நீள ரக முட்டை பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, மெக்சிகோ நாட்டில் அதிகமாக சாகுபடி செய்யும் புரத சத்து நிறைந்தபழ ரகமாகும்.
ஒட்டு ரக நீள முட்டை பழ செடி இரு ஆண்டுகளில், அறுவடைக்கு வரும்.
குறிப்பாக, நீள ரக முட்டை பழ செடி, காய்கள் பச்சை நிறத்திலும், பழம் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
இந்த செடியை, ஒரு முறை நட்டு விட்டால் போதும். ஆண்டு முழுதும், பழ மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த பழத்திற்கு சீசன் இல்லை.
ஒரு புறம் காய்கள் காய்க்கும். மற்றொரு புறம் பழங்கள் பழுத்துக் கொண்டே இருக்கும்.
இந்த பழங்களில், அதிக புரத சத்து நிறைந்து இருப்பதால், குழந்தைகள் முதல், அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம். தொடர்ந்து முட்டை பழம் சாப்பிடுவோருக்கு, உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைத்து, உடல் வலிமை பெற வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
89391 88682.